நாட்டின் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசே ஆலையை ஏன் ஏற்று நடத்தக் கூடாது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு திங்கட்கிழமையான இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கூடுதல் பிரமாணப் பத்திரத்தை வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆலையை இயக்க உரிய பயிற்சிபெற்ற 45 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுபவம் இல்லாத பணியாளர்களைக் கொண்டு ஆக்சிஜன் ஆலையை இயக்கினால், ஆக்சிஜனின் தரம் குறைவதுடன், பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு இல்லாததாக மாறிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும், மாவட்ட ஆட்சியர் நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஆலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் பெரும்பாலோர் எதிர்மனுதாரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலைக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்று கருத முடியாது என்றும் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.