நீங்கள் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்editor.tamil@nw18.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 51818 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.
மேலும் உங்கள் கடிதங்களை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு,
பாஸ்கான் மெரு,
5 மற்றும் 6வது தளம்,
ஆர்.ஆர்.சி. மையம்,
வள்ளுவர் கோட்டம் அருகில்,
கோடம்பாக்கம் பிரதான சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 34
நெட்வொர்க் 18 ஊடக நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணப்பறிப்பு மோசடி- வலையில் சிக்காதீர்கள் - எச்சரிக்கை
கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறி வேலை தேடுபவர்களிடம் பணம் பறிக்கும் மோசடி பரவலாகி வருகிறது. இது தொடர்பாக நெட்வொர்க்18 மீடியா & இன்வெஸ்ட்மெண்ட்ஸ் லிட் மற்றும் எங்கள் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் இத்தகைய மோசடியை தொடர்ந்து கவனித்து வருகிறது.
இதில் என்ன நடக்கிறது என்றால், சில தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வேலைதேடிவரும் அப்பாவிகளை தங்கள் மோசடி வலையில் விழச்செய்கின்றனர், அதாவது எங்கள் குழுமத்தில் நல்ல பிரமாதமான சம்பளத்துடன் வேலை இருக்கிறது, நாங்கள் உங்களுக்கு வாங்கித் தருகிறோம் என்று ஆசை காட்டுகின்றனர். இதனை நம்பும் ஒருவர் வலையில் விழுகிறார் என்றால் அவருக்கு உண்மையில் நியமன ஆணை வந்து விட்டது போலவும், நேர்காணல் காத்திருக்கிறது என்பது போலவும் நாடகம் ஆடி, அவரிடம் இந்த மோசடிப் பேர்வழிகள் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கூறுவார்கள். அல்லது இப்போது பெருகியுள்ள மொபைல் வழி பணம் செலுத்தும் வழிமுறைகள் மூலம் பணம் செலுத்தச் சொல்வார்கள்.
மோசடி எப்படி நடக்கிறது?
முதலில் சிறிய தொகையைச் செலுத்தக் கோருவார்கள் ஏனெனில் பெரிய தொகையாகக் கேட்டால் வேலை வேண்டும் நபர்கள் சுதாரித்து விட்டால்... அதனால் சிறிய தொகையாக முதலில் செலுத்தச் சொல்வார்கள்.
இந்த வலையில் ஒருவர் சிக்கி விட்டால் மோசடிப் பேர்வழிகள் மெல்ல தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பார்கள். அதாவது நிறுவனத்தில் நேர்காணல் தேதி நெருங்குகிறது என்றும் நியமன ஆணைத் தயார் என்றும் பொய் சொல்லி தொகையை அதிகரிப்பார்கள். இன்னும் இத்தகைய மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் சில வேலையை முதலில் தொடங்குவதற்கான ஸ்டார்ட் அப் கிட்களை வழங்குகிறோம் என்பார்கள் அதாவது லேப்டாப், கணினி, அல்லது பயிற்சி என்று கூறி பணம் பறிப்பார்கள்.
மேலும் என்ன செய்வார்கள் என்றால், விண்ணப்பத்தை புரோசஸ் செய்ய வேண்டியுள்ளது, எனவே இன்னும் உங்களைப் பற்றிய விவரங்கள் தேவை என்று கூடுதல் சொந்த விவரங்களைக் கேட்பார்கள். இந்தத் தரவு பிற்பாடு சந்தைகளில் விற்கப்படும் என்பதுதான் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதாகும்.
இந்த மோசடியை அம்பலப்படுத்துவதன் மூலம் வேலை தேடும் எதிர்கால நபர்கள் அனைவருக்கும் நெட்வொர்க் மீடியா நிறுவனம் உங்களை கீழ் வரும் விவரங்களுடன் எச்சரிக்கிறது:
வேலை தேடும் எந்த நபர் அல்லது வேலைக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களிடமிருந்து வேலை தருவதற்காகவோ, பணி நியமன நேர்காணல்களுக்காகவோ, லேப்டாப், சீருடை என்று எந்த வடிவத்திலும் எங்கள் குழுமத்தில் பணமோ, டெபாசிட்டோ, வேறு எதையுமோ கோருவதில்லை.
எங்கள் நிறுவனங்கள், குழுமங்கள் சார்பாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய நாங்கள் தனிநபர்களையோ, வேறு எந்த நிறுவனங்களையோ முகவர்களாக நியமிக்கவில்லை.
இதற்காக வாட்ஸ் அப் மூலம் சம்பந்தப்பட்டவரின் மதிப்பெண் பட்டியல்கள், பான் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, உங்கள் சுயவிவரப்பட்டியல் என்று எதையும் எங்கள் குழுமங்கள் கோருவதில்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் எங்கள் குழுமம் வேலை தேடுவோரின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் பணி நியமன, நேர்காணல் விவகாரங்களை மேற்கொள்ளாது. அதாவது தனிநபர்களின் ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில்,, அவுட் லுக் போன்ற மின்னஞ்சல்களில் எங்கள் குழுமங்கள் தொடர்பு கொள்ளாது. பணிகள் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்புபடுத்தல் எல்லாமே “@nw18.com”, என்று முடியும் மின்னஞ்சல் முகவரி மூலமே செய்யப்படும்.
எனவே, வேலைதேடுவோர் இத்தகைய முகமை, வேலைவாய்ப்பு இணையதளங்கள், அல்லது தனிநபர்கள் ஆகியோரோடு ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டால் அது அவரது தனிப்பட்ட விவகாரம்தானே தவிர நெட்வொர்க் 18 மற்றும் இதன் குழுமங்கள் இதற்கு ஒருபோதும் பொறுப்பேற்காது. இதன் மூலம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏற்படும் இழப்புகளுக்கு நெட்வொர்க் 18 மற்றும் அதன் குழுமங்கள் பொறுப்பேற்காது.
மோசடி சேர்க்கை தொடர்பான சந்தேகத்துக்குரிய நடவடிக்கை ஏதேனும் இருந்தால், அல்லது காண நேரிட்டால் உடனே அதனை எங்களது recruitment.fraud@nw18.com மின்னஞ்சல் மூலம் Fraud & Misconduct Investigations Team-க்கு பரஸ்பர நலன்களுக்காக உடனே புகார் அளிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.