ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் - மத்திய அரசு தகவல்

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் - மத்திய அரசு தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக மீண்டும் திறக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக மீண்டும் திறக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ரயில்களில் ஆக்ஸிஜன் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தது. அங்கே, நாள் ஒன்றிற்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையின் ஒரு பகுதியில் கொரோனா நோயாளிகளுக்காக, ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்கவேண்டும் என்று மத்திய அமைச்சருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரிவாகம் கடிதம் எழுதியிருந்தது.

    Must Read : அதிக ஆபத்து கொண்ட அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளலாம் - ஆய்வு

     

    இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக மட்டும் மீண்டும் திறக்லாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
    Published by:Suresh V
    First published: