ஹோம் /ராமநாதபுரம் /

பாம்பன் பாலத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. அதிவேகத்தால் நேர்ந்த சம்பவம்

பாம்பன் பாலத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. அதிவேகத்தால் நேர்ந்த சம்பவம்

 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

Ramanathapuram District Latest News | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கி பாம்பன் சாலை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

பாம்பன் சாலை பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் படுகாயம் அடைந்ததுடன், 10ற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க காவல்துறையினர் வலியுறுத்தல்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று மதுரையை நோக்கி பாம்பன் சாலை பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். ஆனால் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பாம்பன் பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து பிரேக் பிடிக்காமல் சென்றுள்ளது.

மேலும் படிக்க:  ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை இந்தியாவின் முக்கிய சிவாலயங்கள் இதோ..!

இதனால் எதிரே மதுரைக்கு இருந்து வந்த மற்றொரு அரசு பேருந்து மீது இந்த பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து ஓட்டுனர்கள் படுகாயமடைந்தார்.

மேலும் அப்பேருந்தில் பயணம் செய்த பத்திற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். பேருந்தில் பயணித்த மற்றவர்கள் சிறுகாயங்களுடன் தப்பித்தனர்.

மேலும் படிக்க:  தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

சம்பவ இடத்திற்கு விரைந்து பாம்பன் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 10 நாடகங்களுக்கு இரண்டு விபத்து நடைபெற்றது வாகன ஓட்டிகளை அச்சமடைய‌‌ செய்துள்ளது. இதுபோன்ற‌ விபத்துகள் நடைபெறாமல் இருக்க பாம்பன் சாலை பாலத்தில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்லாமல் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் வாகன ஓட்டிகளை வழியுறுத்துகின்றனர்.

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram