மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் தனுஷ்கோடி அழகிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஒருபுறம் பாக்ஜலசந்தி, மறுபுறம் மன்னார் வளைகுடா, நடுவில் சாலை என கொள்ளை அழக்குக்கு கொஞ்சமும் குறைவு வைக்காத வகையில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெயரிவர்கள் வரை கடலை ரசிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்லப்போனால் இன்னும் அதிகமாக இருக்கும்.
குமரி மாவட்டம் முட்டம் கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்துக்கு கீழே அழகான பூங்கா, அதையொட்டி கப்பல்கள் மாதிரிகளை கொண்ட அருங்காட்சியகம், கலங்கரை விளக்க உபகரணங்கள் காட்சியகம் என சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு வருவோர் சில மணி நேரம் அந்த வளாகத்துக்குள் செலவழிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தனுஷ்கோடியில் செய்யப்பட இருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்பு வரை தனுஷ்கோடி கம்பிப்பாடு - அரிச்சல்முனை இடையே சென்றுவர சாலை வசதிகள் ஏதும் இல்லை. அதன்பின்பு சாலை போடப்பட்டு, தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு தனுஷ்கோடிக்கு மட்டும் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதாகவும், விடுமுறை நாட்களில் 500-லிருந்து 800 வாகனங்கள் வரை செல்வதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருகடல் சங்கமிக்கும் பகுதி மற்றும் சூரிய உதயம், சூரியன் மறையும் காட்சிகளை ஹாயாக அமர்ந்து ரசிக்க கடற்கரையில், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றமே அடைகின்றனர். எனவே காலமாற்றத்துக்கு ஏற்றபடி சுற்றுலா தலங்களை நவீனப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்டுவதுதான் சரியானது என்பது பெரும்பாலானோரின் கருத்து. வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகமாகி வருகிறது.