ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை இந்தியாவின் முக்கிய சிவாலயங்கள் இதோ..!

ராமேஸ்வரம் முதல் கேதார்நாத் வரை இந்தியாவின் முக்கிய சிவாலயங்கள் இதோ..!

சிவன்கோயில்

சிவன்கோயில்

Sivan Temples | ராமேஸ்வரம் முதல் வட இந்தியாவில் உள்ள கேதார்நாத் வரை இந்தியாவில் உள்ள முக்கியமான சில சிவாலயங்களைப்பற்றி பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

இந்தியாவில் உள்ள சில முக்கியமான சிவாலயங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

​அமர்நாத் கோயில், காஷ்மீர்

ஜம்மு - காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயில், உலகப்புகழ் பெற்றது. இக்கோயிலில் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். குறிப்பாக ஆண்டிற்கு ஒரு முறை தென்படும் பனி லிங்கத்தைக் காண இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.

கேதார்நாத், உத்தராகண்ட்

கர்வால் இமாலய மலைத்தொடருக்கு மத்தியில் இக்கோயில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றின் வசிப்பிடமாகவும், இந்தியாவில் மிகவும் பிரபலமான சிவன் கோயிலில் ஒன்றாகவும் உள்ளது.

வாரணாசி, உத்திரப்பிரதேசம்

புனித நகரமான வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில், இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான சிவன் கோயிலாகும். இக்கோயிலுக்கு சென்று வந்தால் மோட்சம் கிடைக்கும், மறுபிறப்புகளில் இருந்து விடுவிப்பு கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

​சோம்நாத், குஜராத்

குஜராத்தில் அமைந்துள்ள சோம்நாத் சிவன் கோயில் இந்தியாவின் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும். இது நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் ஜோதிர்லிங்க கோயிலாகவும் கருதப்படுவதுடன், இந்தியாவின் முக்கியமான சிவன் கோயிலாகவும் கருதப்படுகிறது.

​ஸ்ரீ காலஹஸ்தி, ஆந்திரப்பிரதேசம்

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற சிவன் கோயிலுக்கு, பெரும்பானமையான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலில் உள்ள சிவபெருமான் காளஹஸ்தீஸ்வரராக போற்றப்படுகிறார், மேலும் இந்த கோயில் நாட்டில் உள்ள பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

பிரகதீஸ்வரர் கோயில், தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தஞ்சையில் காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில், இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கமும் நந்தியும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்,

ராமநாதசாமி கோயில், தமிழ்நாடு

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசாமி கோயில், ஜோதிர்லிங்க ஆலயமாக விளங்கிறது. ராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளால் இந்த கோயில் ராமேஸ்வரம் என பெயர்பெற்றதாக கூறப்படுகிறது.

அண்ணாமலையார் கோயில், தமிழ்நாடு

தமிழகத்தில் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோயிலில் சிவனை அக்னி லிங்கமாக வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக பார்வதி தேவியும் இங்கு வணங்கப்படுகிறார்.

(முந்தைய பதிப்பில் சில தகவல்கள் முரணாக இருந்ததால் திருத்தம் செய்து புதிப்பித்துள்ளோம்)

Published by:Karthi K
First published:

Tags: Local News, Ramanathapuram