திருப்பூரில் டாஸ்மாக் கடை ஷட்டரை துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு!
- Published by:Esakki Raja
- news18-tamil
Last Updated:
டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ய பார்த்தபோது சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்த டி.வி.ஆர், ரெக்கார்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதும் தெரியவந்தது.
திருப்பூரில் டாஸ்மாக் கடை ஷட்டரை துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கள்ளச்சாராயம் காய்ச்சுவது, தென்னை, பனை மரங்களில் கல் கட்டுவது, போன்ற சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஷட்டரை கட்டிங் இயந்திரம் மூலம் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளதாக அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
advertisement
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, டாஸ்மாக் கடையின் ஷட்டர் கட்டிங் எந்திரம் மூலம் வெட்டப்பட்டு, அந்த துளையின் வழியே மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள், கடையின் உள்ளே இருந்த 750, மதுபான பாட்டில்களை திருடியது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். கடையில் இருந்த பெரும்பாலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றதால் அந்த கடையே காலி செய்யப்பட்டது போல் காட்சி அளித்தது.
advertisement
இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ய பார்த்தபோது சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்த டி.வி.ஆர், ரெக்கார்டரையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் சென்று பார்த்தபோது கடையிலிருந்து 700 மீட்டர் தூரத்தில் டி.வி.ஆர், ரெக்கார்டரை மது திருடர்கள் முள் வேலியில் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது.
கண்டுபிடிக்கப்பட்ட டி.வி.ஆர், ரெக்கார்டரை கைப்பற்றி அதிலுள்ள ரெக்கார்ட் ஆன காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருப்பூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
advertisement
இந்த சம்பவம் குறித்து மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், துணை கண்காணிப்பாளர் வின்சென்ட், ஆய்வாளர் மகேந்திரன் ஆகிய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Location :
First Published :
May 29, 2021 8:16 PM IST
தமிழ் செய்திகள்/ செய்திகள்/தமிழ்நாடு/
திருப்பூரில் டாஸ்மாக் கடை ஷட்டரை துளையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு!






