advertisement

வேட்பாளர்கள் தேர்வில் தொடர் இழுபறி.. மாணிக்கம் தாகூர் ராஜினாமா முடிவு.. கார்கேவுக்கு கடிதம்!

Last Updated:
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.
1/6
 தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
advertisement
2/6
 அதன்படி, பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர் (தனி), கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் மேலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

3/6
 இதேபோல், கூட்டணியில் உள்ள மற்றக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக்கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கலையும் தொடங்கியுள்ளனர்.

4/6
 இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வேட்பாளர் தேர்வு குறித்து தேசியத் தலைமையுடன் ஆலோசனையும் மேற்கொண்டிருந்தார்.

5/6
 இருந்தபோதிலும் காங்கிரஸின் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர் அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.

6/6
 தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். வேட்பாளர்கள் தேர்வில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் சூழலில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணப் பத்திரிகை வைப்பதாகக் கூறி கைவரிசை... பெண்ணை கட்டிப் போட்டு நகை கொள்ளை... அச்சத்தில் உறைந்த பெண்கள்...

  • கடலூரில் பத்திரிகை வைப்பதாகக் கூறி பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை

  • தாலிச் செயின், 11 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

  • கைரேகை தடயங்களை சேகரித்து, குற்றவாளிகள் உள்ளூர்வாசிகள் என சந்தேகித்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement