முகப்பு /செய்தி /விளையாட்டு / French Open 2021: ரபேல் நடால் Vs நோவக் ஜோகோவிச்: ஃபிரஞ்ச் ஓபனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் வெல்லப்போவது யார்?

French Open 2021: ரபேல் நடால் Vs நோவக் ஜோகோவிச்: ஃபிரஞ்ச் ஓபனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலில் வெல்லப்போவது யார்?

நடால் Vs ஜோகோவிக்

நடால் Vs ஜோகோவிக்

மகளிர் டென்னிஸ் ஜாம்பவான்களான மார்டினா நவரத்லோவா, கிறிஸ் எவர்ட்க்கிடையே நடந்த 80 சந்திப்புக்களுக்குப் பின், நடால் – ஜோகோவிச்சின் ரைவல்ரியே வரலாற்றுச் சிறப்புமிக்கது என டென்னிஸ் வல்லுனர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

  • Last Updated :

உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் ரசிகர்கள், இன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்...

ரோஜர் பெடரர், ரபேல் நடால் வரிசையில் டென்னிஸ் வரலாற்றில் மதிப்புமிக்க கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை அதிகமாக வென்றுள்ள BIG THREE என்றழைக்கப்படும் மூவேந்தர்களுள் மூன்றாமவர் நோவக் ஜோகோவிச்.. தற்போதைய உலகத் தர வரிசையில் முதலாமவர். களத்திற்கு வெளியேயும், ஆட்ட இடை வேளைகளின் போதும் குறும்புத்தனத்தையும், நேசத்தையும் வெளிப்படுத்தக் கூடியவர். ஆனால் போட்டி என வந்துவிட்டால் நெவர் கிவ் அப்தான் இவரது தாரக மந்திரம். இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளவர்.

ஜாம்பவானான ஜோகோவிச், தன்னைவிட ஒரு வயது மூத்தவரும், 20 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று டென்னிஸ் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவருமான ரபேல் நடாலுடன் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரை இறுதியில் இன்று மோதவுள்ளார்.

நோவக் ஜோகோவிச்

ஆடவர் டென்னிசை பொருத்தவரை, குறிப்பாக கவுரவமிக்க 4 கிராண்ட்ஸ்லாம் களங்களில், 2003 முதல் தற்போது வரை பெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவர் வைத்ததுதான் சட்டம். இந்த மூவேந்தர்களைத் தவிர, தலா 15 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை டென்னிஸ் வரலாற்றில் வேறு எவரும் வென்றதில்லை. அனைத்துப் போட்டிகளிலும் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்வார்களே தவிர லேசில் மற்றவர்களை நுழையவிட்டதில்லை.

Also Read:   தினமும் 2 பழங்கள் மற்றும் 3 காய்கறிகள் சாப்பிட்டால் நீண்ட நாள் வாழலாம் - ஹார்வர்ட் ஆய்வில் தகவல்!

மூவேந்தர்களுள் முதலிரண்டு ஜாம்பவான்களான பெடரர் – நடால் இடையிலான ரைவல்ரியை விட , நடால் –ஜோகோவிச் களப் பகைமைதான் பெரிதாக பார்க்கப்படுகிறது. இன்று நடாலுடன் பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் மோதவுள்ள ஜோகோவிச் தங்கள் களப்பகைமை, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது எனக் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெடரர் நடாலுக்கிடையே நடைபெற்றுள்ள 40 தனிப்பட்ட மோதலில் 24-க்கு 16 என நடால் முன்னிலை வகிக்க, நடால் – ஜோகோவிச்கிடையிலான 57 மோதல்களில் ஜோகோவிச் முன்னிலை வகிக்கிறார். ஆம். 2006ல் நீண்ட ஹேர்ஸ்டைலுடன் ஆடிய அப்போதைய நடப்பு சாம்பியன் நடாலுடன் முதல் சந்திப்பில்19 வயது ஜோகோவிச் தோற்றிருந்தாலும் தற்போது பின்னவரின் கையே 29-க்கு 28 என மேலோங்கி உள்ளது.

நடால்

மகளிர் டென்னிஸ் ஜாம்பவான்களான மார்டினா நவரத்லோவா, கிறிஸ் எவர்ட்க்கிடையே நடந்த 80 சந்திப்புக்களுக்குப் பின், நடால் – ஜோகோவிச்சின் ரைவல்ரியே வரலாற்றுச் சிறப்புமிக்கது என டென்னிஸ் வல்லுனர்கள் சுட்டிகாட்டுகின்றனர்.

காயத்தின் காரணமாக மூவேந்தர்களுள் முதலாமவரான பெடரர் 4ம் சுற்றுடன் ஒதுங்கிவிட, மற்ற இருவரும் இன்று பிரெஞ்சு ஒபன் அரையிறுதியில் மோதவுள்ளனர். இதில் களிமண் கள நாயகன் நடால் வென்று இறுதிக்கு முன்னேறி, 21வது கிராண்ட்ஸ்லாமை வென்று பெடரரை முந்துவாரா அல்லது நடாலை அதிக முறை வீழ்த்திய ஜோகோவிச் இறுதிக்குச் சென்று 19 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று பெடரர், நடாலின் 20 பட்டங்கள் சாதனையை நெருங்குவாரா என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Also Read:   கொரோனா தொற்றிலிருந்து விரைவாக குணமடைய உதவும் சில யோகா ஆசனங்கள்!

ஆனால் ரோலண்ட் கேராஸ் களிமண் களத்தில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் களிமண் கள நாயகன் நடால் என்பதும், வாழ்க்கையில் ஒரே முறைதான் ஜோகோவிச் சாம்பியன் ஆகியுள்ளார் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியவை. 2012, 2014, 2020 ஆண்டுகளில் ரோலண்ட் கேராசில் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியனானது நடாலுக்கு பிளஸ்.

மொத்தத்தில் டென்னிஸ் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆவலைத் தூண்டியுள்ளது, இருவருக்கிடையிலான இந்த 58-வது மோதல் என்றால் மிகையாகாது.

First published:

Tags: French Open, Novak Djokovic, Rafael Nadal, Roger Federer, Tennis