கடுமையான கோவிட் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பல குடும்பங்கள் வைரஸுடன் போராடி வருகின்றன. கோவிட் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலர் மெல்ல மெல்ல தொற்று தாக்கத்தில் இருந்து மீண்டு வருகிறார்கள். தொற்று தாக்காமல் தற்காத்து கொள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகாசனங்கள் மிக சிறந்த வழியாக இருக்கும் அதே நேரத்தில், தொற்று தாக்கியதற்கு பின் அதிலிருந்து மீளவும் யோகா உதவுகிறது. இந்திய கிளாசிக்கல் கலைப்படைப்புகள் மற்றும் யோகாவை மையமாகக் கொண்ட ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் டுடோரியல் தளம் தி பிங்க் லோட்டஸ் அகாடெமியா (The Pink Lotus Academia). இது டெல்லியில் அமைந்துள்ளது. இது மியூசிக் வெல்னெஸ் செக்ஷன், யோகா டீச்சர்ஸ் டிரெய்னிங் சர்டிபிகேஷன் கோர்ஸ், ஏரியல் யோகா உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
இந்த தளம் நோயெதிர்ப்பு சக்தியை மீட்டெழுப்பவும், உடலையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்து கொள்ளவும், கோவிட்டுக்கு பிந்தைய விரைவான குணப்படுத்துதலுக்கும் வழிவகுக்கும் ஆசனங்களை செய்ய அறிவுறுத்துகிறது. யோகா பயிற்சி உடல் மற்றும் மன ரீதியான பல அன்றாட பிரச்சினைகளுக்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதாக அறியப்படுகிறது.
Also Read: முதல்வர் ஸ்டாலினின் மோடி எதிர்ப்பு அரசியல்: அரசுக்கு என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும்?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் உடலின் முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது வரை, மன அழுத்தத்தைக் குறைப்பதில் இருந்து மனச்சோர்வைக் குறைப்பது வரை, சரியான ஆசனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை விழிப்புணர்வுடன் பயிற்சி செய்தால் யோகா நம் வாழ்வில் ஆரோக்கியத்தை தரும் சிறந்த மருந்தாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உடலையும் மனதையும் பலப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சோர்வை நீக்கும் சில வகை ஆசனங்கள் பற்றி பார்க்கலாம்.
ஸ்டாஃப் போஸ் (Staff pose):
இந்த எளிய ஆசனம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இது தோள்கள் மற்றும் மார்பை ஸ்ட்ரச் செய்து, பின்புற தசைகளை வலுப்படுத்தி, தோற்ற அமைப்பை மேம்படுத்துகிறது.
ஸ்டெப் 1:
தரையில் உட்கார்ந்து உங்கள் கால்களை முன்னால் நீட்டப்பட்ட நிலையில் வைத்து கொள்ளுங்கள். முதுகோடு சேர்த்து உங்கள் பின்புறம் நேராக இருக்குமாறு உட்கார்ந்து கொள்ளுங்கள். இடுப்பை சற்று உயரமாக வைத்திருக்க ஒரு போர்வை அல்லது மெத்தை மீது அமரலாம். மேல் உடலின் சரியான சீரமைப்பை உறுதிப்படுத்த, நீங்கள் ஒரு சுவரில் சாய்ந்தபடி உட்காரலாம். 2 இடுப்பு எலும்புகளுக்கு இடையில் அமைந்துள்ள சாக்ரம் (sacrum) மற்றும் ஷோல்டர் பிளேடுகள் (shoulder blades) சுவரை தொட வேண்டும், ஆனால் கீழ் முதுகு மற்றும் தலையின் பின்புறம் சுவரை தொட கூடாது.
ஸ்டெப் 2:
இப்போது ங்கள் பார்வை இருக்கும் திசை நோக்கி பக்கவாட்டில் கைகள் இரண்டையும் கீழே ஊன்றி தொடைகளை உறுதிப்படுத்தவும். வயிற்றை கடினப்படுத்தாமல், தரையில் கீழே அழுத்தி, உங்கள் கணுக்கால் மற்றும் கால்களை நெகிழ்வாக வைக்கவும். இப்போது உங்கள் முன் உடற்பகுதியை தரையில் செங்குத்தாக நீட்டிக்க, பியூபிஸிலிருந்து ஸ்டெர்னமுக்கு மேல்நோக்கி செல்லும் ஆற்றலை பற்றி யோசித்துப் பாருங்கள், பின் தோள்களிலிருந்து வால் எலும்பு வரை பின்புறம். வால் தரையில் நீளமாக இருப்பதை போல கற்பனை செய்து பாருங்கள்.
Also Read: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள்: கொரோனா குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு?
ஸ்டெப் 3:
முக்கியமாக உங்கள் முதுகெலும்பை உங்கள் உடற்பகுதியின் செங்குத்து மையத்தில் “ஸ்டாஃப்” என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த போஸை ஒரு நிமிடம் அல்லது அதற்கு மேல் செய்வது நல்ல பலன் தரும்.
கேட் அன்ட் கவ் போஸ் (Cat and Cow pose);
இந்த ஆசனம் கேட் போஸ் (மர்ஜார்யாசனா) மற்றும் கவ்போஸ் (பிட்டிலசனா) ஆகியவற்றை இணைத்து உடலை மெதுவாக நீட்டவும், மன அழுத்தத்தை குறைக்க, முதுகெலும்பு மற்றும் வயிற்று உறுப்புகளுக்கு மசாஜ் செய்ய பயன்படுகிறது.
இந்த போஸில் கைகளை தோள்பட்டைகளுக்கு நேராகவும், கால் முட்டிகளை இடுப்பிற்கு நேராகவும் வைத்து கொண்டு நாலு கால் விலங்குகளை போல இருக்க வேண்டும். பின்னர் முதுகு தண்டு வடத்தை கீழ் நோக்கி அதாவது தலையிலிருந்து இடுப்பு வரை யூ ஷேப்பில் வளைத்து பார்வையை நேராக வைக்க வேண்டும். மூச்சை உள்ளிழுப்பதன் மூலம் பசு போஸில் நகர்ந்து, உங்கள் கன்னம் மற்றும் மார்பைத் தூக்கி, உச்சவரம்பை நோக்கிப் பாருங்கள். உங்கள் தோள்பட்டைகளை அகலப்படுத்துங்கள்.
சில வினாடிகள் கழித்து தலை மற்றும் முதுகை கீழ் நோக்கி முழுவதுமாக வளைத்து பார்வையை வயிற்றை நோக்கி திருப்ப வேண்டும். முதலில் உங்கள் வயிற்றை தரையை நோக்கித் தாழ்த்தி, பின்னர் உங்கள் பார்வையை மெதுவாக உயர்த்தி சுவாசத்தை கீழ் நோக்கி மெதுவாக விட வேண்டும். மூச்சை உள்ளிழுக்க கவ் போஸிற்கும், மூச்சை வெளியே விட கேட் போஸிற்கும் மாறி மாறி செல்ல வேண்டும்.
பட்டர்ஃபிளை போஸ் (Butterfly pose):
இந்த ஆசனம் உட்புற தொடைகள், இடுப்பு மற்றும் முழங்கால்களை நீட்டி, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது, நீண்ட நேரம் நிற்பது மற்றும் நடந்து செல்வதனால் ஏற்படும் சோர்வை நீக்குகிறது.
முதலில் பாய் அல்லது வேறு ஏதேனும் மேன்மையான துணியை விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் காலின் இரு அடி பாதங்களும் ஒன்றையொன்று தொடுவது போல சேர்த்து கொள்ளுங்கள். இரு பாதங்களையும் உங்கள் இரு கைகளால் பிடித்து கொண்டு பாதங்களை சேர்த்து வைத்து கொண்டுள்ள நிலையிலேயே, கால்களை பட்டாம் பூச்சி இறக்கை போல மெதுவாக மேலும் கீழும் அசைக்க வேண்டும். வலி அல்லது செய்வதில் சிரமம் நேரிட்டால் பயிற்சியை நிறுத்தி விட்டு இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.
பீஜின் போஸ் அல்லது புறா போஸ் (Pigeon pose):
உங்கள் தொடை, இடுப்பு மற்றும் பின்புறத்தை நீட்டுவதன் மூலம், இந்த ஆசனம் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதற்கு ஒரு மருந்தாக செயல்படுகிறது, மேலும் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது.
முதலில் பாய் அல்லது துணி விரிப்பில் முழங்காலிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பின் வலது காலை மெதுவாக நகர்த்தி பத்மாசன நிலையில் வைத்து அமர வேண்டும். அடுத்த கட்டமாக இடது காலை பின்னோக்கி நீட்டி நேராக இருக்குமாறு வைத்து கொண்டு இரு கைகளையும் தரையை தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின் பின்னால் இருக்கும் இடது காலை மடக்கி மேலே நோக்கி கொண்டு வந்து கைகளை பின்னோக்கி எடுத்து சென்று இடது பாதத்தினை பிடித்து கொள்ளுங்கள். இப்போது மூச்சினை ஆழ்ந்து இழுத்து விடுங்கள். பின் இயல்பு நிலைக்கு திரும்பி வலது காலிலும் இதே முறையை செய்யுங்கள். ஒவ்வொரு காலிலும் இதே போல சுமார் 30 விநாடிகள் பயிற்சி செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, Health, Yoga, Yoga Health Benefits