ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ரகசியம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வைட்டமின் மற்றும் தாது நிறைந்த உணவுகள் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதிக கலோரி நிறைந்த உணவுகள், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அதிக புரத உணவுகளை சாப்பிடுவது நல்லது என்று பொதுவாக நம்பப்பட்டாலும், ஹார்வர்டின் புதிய ஆய்வு இதில் உண்மை இல்லை என நிரூபித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, நீண்ட ஆயுளின் ரகசியம் பழங்கள் மற்றும் காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்ப்பதேயாகும். ஆம், நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைச்சி உதவாது. ஆனால் கீரைகள் , பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என தெரியவந்துள்ளது.
ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை அமெரிக்க சுகாதார சங்கம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், சீரான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நீண்ட காலம் வாழ உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னணி ஆய்வு எழுத்தாளரும், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி உறுப்பினருமான டோங் டி. வாங், பழங்களை இரண்டு விகிதங்கள் அடிப்படையிலும், காய்கறிகளின் மூன்று விகிதங்கள் அடிப்படையில் சாப்பிட்டு வந்தால் இறப்பு விகிதம் குறைக்கும் என கூறியுள்ளார்.
இந்த அளவு நாள்பட்ட நோயைத் தடுக்கும் வகையில் அதிக நன்மைகளை அளிக்கிறது என்றும் நோய்களினால் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் ஆயுட்காலத்தை அதிகரிக்க எல்லா பழங்களும் காய்கறிகளும் பயனளிக்காது, எல்லா பழங்களும், காய்கறிகளும் சமமானவை அல்ல என விளக்கிய அவர், சில பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றவற்றை விடவும் சிறந்தவை மற்றும் நீண்ட ஆயுளை அதிகரிப்பதில் நன்றாக வேலை செய்யும் என்று கூறினார். குறிப்பாக பச்சை இலை கீரைகள் மற்றும் குறைவான மாவுச்சத்துள்ள காய்கறிகள் நாள்பட்ட நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். இருப்பினும், இவற்றை குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகமாக சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை அளிக்காது என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள் :
Also Read: நெபுலாவின் கண்கவர் புகைப்படத்தை கடற்பசுக்களோடு ஒப்பிட்ட நாசா: ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!
பச்சை இலை காய்கறிகள்: கீரை, முட்டைக்கோஸ்
பீட்டா கரோட்டின் நிறைந்த காய்கறிகள்: கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி
சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரி : எலுமிச்சை, ஆரஞ்சு, மல்பெரி, ஸ்ட்ராபெரி
தவிர்க்க வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்கள்:
மாவுச்சத்துள்ள காய்கறிகள்: பட்டாணி, சோளம் மற்றும் உருளைக்கிழங்கு.
மேலும் கடல் வகை உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவையும் ஆரோக்கியமான உணவுகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. கடல் உணவுகள் டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள் அபாயத்தை குறைக்கும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diet, Food, Health Benefits