அசுரன் போன்ற கதையல்ல 'வெந்து தணிந்தது காடு’ - எழுத்தாளர் ஜெயமோகன்

சிம்பு

அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல ‘வெந்து தணிந்தது காடு ‘ என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

 • Share this:
  எழுத்தாளர் சுஜாதா இல்லாத இடத்தை ஜெயமோகன் நிரப்புகிறார். நிரப்புகிறார் என்றது, சுஜாதாவை பயன்படுத்தியவர்கள் இப்போது ஜெயமோகனை பயன்படுத்துகிறார்கள் என்ற அர்த்தத்தில். வசந்தபாலன், பாலா, ஷங்கர், மணிரத்னத்தைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ மேனனும் ஜெயமோகனுடன் கைகோர்த்துள்ளார். படம் வெந்து தணிந்தது காடு.

  சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு பற்றி பல்வேறு யூகங்கள். நதிகளிலே நீராடும் சூரியன் படத்தையே கௌதம் சிம்புவை வைத்து எடுக்க நினைத்தார், ஆனால், அசுரன் போல ஒரு படம் செய்ய வேண்டும் என்று சிம்பு விரும்பியதால் வெந்து தணிந்தது காடு படத்தை எடுக்கிறார் என்பது அதில் ஒன்று. இந்த செய்தி உண்மைதான். சிம்புவின் விருப்பம் காரணமாகவே வெந்து தணிந்தது காடு முதலில் எடுக்கப்படுகிறது. இது ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்படுகிறது. இந்தப் படம் குறித்து தனது தளத்தில் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.  "கௌதம் வாசுதேவ் மேனனின்வெந்து தணிந்தது காடுமுதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான். அந்தக்கதை மென்மையான நகர்ப்புறக் காதல்கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு. சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக்கதை தெரிவுசெய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

  Also Read : வசந்தபாலனின் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்..  Also read : தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் முதல்முறையாக போட்டோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..

  அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது." என இவ்வாறு ஜெயமோகன் வெந்து தணிந்தது காடு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: