• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் முதல்முறையாக போட்டோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..

தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் முதல்முறையாக போட்டோ வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..

சந்தோஷி

சந்தோஷி

தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் தான் இருக்கும் போட்டோவை சமீபத்தில் சந்தோஷி சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார்.

  • Share this:
பல்வேறு ஹிட் சீரியல்களை சின்னத்திரை ரசிகர்களுக்காக ஒளிபரப்பி வரும் சன் டிவி-யில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை சந்தோஷி. சின்னத்திரையில் மட்டுமன்றி வெள்ளித்திரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளர். இவரை சட்டென்று அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா படத்தில், ஹீரோயின் மனிஷா கொய்ராலாவின் தங்கையாக நடித்திருந்தந்தை நினைவு கூறலாம்.

முதன் முதலாக கடந்த 2000-ம் ஆண்டில் பெண்கள் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானாலும், சினிமா மற்றும் சீரியல் என இரண்டு ஸ்கிரீனிலும் ஏராளமான வேடங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையை பொறுத்தவரை கடந்த 2001-ம் ஆண்டு ஒளிபரப்பான வாழ்க்கை சீரியலில் நடித்தார். அதன் பின்னர் சன் டிவி-யில் ஒளிபரப்பான பல சீரியல்களில் கடந்த 2017-ம் ஆண்டு வரை நடித்துள்ளார். வாழ்க்கை சீரியலை தொடர்ந்து சன் டிவி-யில் ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மரகதவீணையில் திவ்யா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இவை தவிர ஜெயா டிவி-யில் ஒளிபரப்பான அண்ணி சீரியலிலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான அம்மு சீரியலிலும், கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான சூரியபுத்ரி, வாடகை வீடு சீரியல்களிலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான பாவ மன்னிப்பு, கேப்டன் டிவி-யில் ஒளிபரப்பான இல்லத்தரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Also read : மழையில் நனைந்தபடி புகைப்படம் வெளியிட்ட அமைரா தஸ்தூர்



 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)





வெள்ளித்திரையில் நடிகர் ஷியாமிற்கு பாலா திரைப்படத்தில் தங்கையாக நடித்துள்ளார். தவிர மாறன், சத்யராஜின் மிலிட்டரி, ஆசை ஆசையாய், அன்பே அன்பே, உன்னை சரணடைந்தேன், யுகா, நினைத்தாலே, வீராப்பு, மரியாதை, போர்க்களம், சென்னை 2 பாங்காங் உள்ளிட்ட தமிழ் படங்கள், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரையில் கடைசியாக மரகத வீணையிலும், வெள்ளித்திரையில் கடைசியாக சென்னை 2 பாங்காங்கிலும் நடித்திருக்கிறார் நடிகை சந்தோஷி. சினிமா, சீரியல் தவிர ஃபேஷன் டிசைனராகவும், மேக்கப் ஆர்டிஸ்டாகவும் ஜொலிக்கிறார் இவர்.

Also Read : அம்மன் அவதாரத்தில் நடிகை ரேகா.. பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்



Plush Boutique & Beauty Lounge என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சந்தோஷி. தன்னுடன் மீடியா துறையில் பணியாற்றிய ஸ்ரீகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை சந்தோஷிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தனது இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் தனது ட்வின்ஸ் குழந்தைகளுடன் தான் இருக்கும் போட்டோவை சமீபத்தில் சந்தோஷி சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் அவரை ட்வின்ஸ் குழந்தைகளுடன் பார்த்த ரசிகர்களை அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: