வசந்தபாலனின் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்..

நடிகை வனிதா

வசந்தபாலனின் புதிய படத்தில் மேலும் இரு நட்சத்திரங்கள் இணைந்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பை யூ பாய்ஸ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ளது.

  • Share this:
    இயக்குனர் வசந்தபாலன் சின்ன இடைவெளிக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஜெயில் என்ற படத்தை இயக்கினார். ஜி.வி.பிரகாஷை வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்தபாலன் என்பது முக்கியமானது. ஜெயில் முடிந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் வெளிவரவில்லை.

    அதனைத் தொடர்ந்து அர்ஜுன்தாஸ் நடிப்பில் புதிய படத்தை வசந்தபாலன் தொடங்கினார். யூ பாய்ஸ் ஸ்டுடியோ என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. அர்ஜுன்தாஸ் லோகேஷ் கனகராஜின் கைதி, மாஸ்டர் படங்களில் நடித்தவர். அவர் நாயகனாக நடிப்பது இதுவே முதல்முறை.



    படம் தொடங்கிய நிலையில், வசந்தபாலன் கொரோனா பாதிப்புக்குள்ளானார். மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்து வந்துள்ளார். தற்போது உடல்நிலை தேறிய நிலையில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் வசந்தபாலன்

    Also Read : ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ படத்தின் கதை இதுதான்..



    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அர்ஜுன் சிதம்பரம் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பதாக தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது. ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: