பி.வி சிந்து சிங்கப்பூர் ஓபனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றதை அமுல் நிறுவனம் கொண்டாடி உள்ளது. சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடந்த ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் 500 கோப்பையை ஏஸ் ஷட்லர், பிவி சிந்து வென்றதை தொடர்ந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. பேட்மிண்டன் நட்சத்திரத்தின் சமீபத்திய சாதனையைப் பற்றி பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் பால் பிராண்ட் முன்னனி நிறுவனமான அமுலும் (AMUL) இணைந்துள்ளது.
இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற வெற்றியைப் பாராட்டும் வகையில் அமுல் நிறுவனம் "சிந்துபூர் ஓபன்" என்ற பட்டம் அழித்து சிறப்பித்தது. இது சிந்துவின் அபார வெற்றியை காட்டுகிறது.
ஆட்டத்தின் துவக்கத்தில் முதல் இரண்டு புள்ளிகளை இழந்திருந்த சிந்து, பின்னர் அதிரடியாக விளையாடி இறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்ற சிந்து, இந்திய பெண்களில் 2வது இடத்தை பெற்றுள்ளதோடு, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது பெருமைக்குரிய ஒன்றாக உள்ளது.
இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்துவின் வெற்றியைப் பாராட்டி, அமுல் டாப்பிக்கல் (Amul topical) "சிந்துபூர் ஓபன்" என்ற தலைப்பில் வெற்றியை கொண்டாடியதோடு அதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
அமுல் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரம் தனது தொப்பியில் மற்றொரு இறகை சேர்த்துள்ளது” எனவும் பதிவிட்டுள்ளது.
ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் கருத்துகள் பிரிவில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றியின் மூலம் நம் நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளதாகவும், இந்த வெற்றி பல வீரர்களின் விடாமுயர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிந்து "சூப்பர் 500 " போட்டியில் பட்டம் வென்றதை "ஆரம்பம்" என்றும் அழைத்தனர், ஏனெனில், அவர் இலக்ககை மிகவும் பெரிதாகவே கொண்டிருப்பார். சீனாவின் வாங் ஸி யீ உடனான கடுமையான போரில், சிந்து அவரை வென்றார்.மேலும் ஆசிய சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றவருக்கு எதிராக 21-9 11-21 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
ALSO READ | தனித்துவமான திறமை- நாட்டுக்குப் பெருமை - சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
சையத் மோடி இன்டர்நேஷனல் மற்றும் சுவிஸ் ஓபனில் நடந்த இரண்டு சூப்பர் 300 பட்டங்களை வென்றதன் பிறகு, இந்த சிங்கப்பூர் ஓபன் சீசனின் மூன்றாவது பட்டத்தையும் அவர் வென்றுள்ளார். இவர் உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். மேலும் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் இப்போது ஜூலை 28 ஆம் தேதி Birmingham- ல் தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.