Home /News /sports /

ஆயிரமாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி... கடந்து வந்த பாதை

ஆயிரமாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி... கடந்து வந்த பாதை

இந்திய அணி

இந்திய அணி

டி20யின் வருகைக்குப்பின் ஒருநாள்போட்டிகளுக்கு சற்றே மவுசு குறைந்தாலும், உலகக் கோப்பை என்றால் ODI-தான் எனக் கூறும் நிலை இன்றும் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டி, இந்தியாவுக்கு ஆயிரமாவது போட்டியாக அமையவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் இந்திய அணி கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

கிரிக்கெட்டில் வல்லரசாக இந்தியா திகழ முக்கிய காரணம் ஒரு நாள் போட்டிகள். 1974-ல் அஜித் வடேகர் தலைமையில் இங்கிலாந்து அணியை எதிர்த்து லீட்ஸ் மைதானத்தில் அல்லித்தண்டு காலெடுத்து முதல் போட்டியில் அடிவைத்த வடேகர் தலைமையிலான இந்திய அணி தோல்வி கண்டது.

அடுத்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றிகாத்திருந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் அடி வாங்கிய இந்தியா அடுத்த போட்டியில் பலம் குறைந்த கிழக்கு ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது.

இடையே சில ஆண்டுகள் போட்டிகளிலேயே பங்கேற்கவில்லை,1979-ல் நடந்த 2-வது உலகக் கோப்பையிலும் தோல்விகளைச் சந்தித்த இந்தியா, அடுத்த கோப்பையை வெல்லும் என யாரேனும் கூறியிருந்தால் தரையில் புரண்டு சிரித்திருப்போம் என மதன்லால் கூறியிருந்தார்

ஆனால் 1983-ல் கபில்தேவின் இளம்இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் என்ற அசுரனை வீழ்த்தி கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு வியப்பையும், அதிர்ச்சியையைும் ஏற்படுத்தியது முதல் ஒரு நாள் போட்டிகளுக்கு இந்தியாவில் மவுசும் கூடியது. இந்திய அணியின் ரேட்டிங்கும் எகிறியது. 1985-ல் நடந்த world series championship போட்டிகள், இந்திய வீரர்களை ஹாலிவுட் ரேஞ்சுக்கு உயர்த்தியது.

ஒருநாள் போட்டிகளின் பிரபலத்தை உணர்ந்த பிசிசிஐ அதை காசாக்குவதற்காக இருதரப்பு மற்றும் முத்தரப்புப் போட்டிகளை நடத்தத்தொங்கியது. 1987-ல் இந்தியாவில்உலகக் கோப்பையை நடத்தி கோடிகளை குவித்தது.

மேலும் படிங்க: மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணியில் இஷான் கிஷன் சேர்ப்பு 


பின்னர் பிசிசிஐ ஸ்ட்ராங்மேனான ஜக்மோகன் டால்மியா உபயத்தால்1989-ல் world series போன்ற தொடர்கள் பிசிசிஐ-ன் பேங்க் பேலன்ஸை பன்மடங்காக்கின. 1993 ஹீரோ கோப்பையின்போது தொலைக்காட்சி உரிமத்தை அதிக தொகைக்கு கேட்கும் நிறுவனத்துக்கே தரலாம் என தீர்ப்பளிக்கப்பட்டபோது ஜாக்பாட் அடித்தது. அதுமுதல் வீழ்த்த முடியாத வல்லரசாக வளரத் தொடங்கிய இந்தியாவுடன் விளையாட எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டின. கிரிக்கெட்டின் பவர் சென்டராக இந்தியா விளங்க, ஒரு நாள் போட்டிகளே காரணம்.

சச்சின் என்ற தனி மனிதனால் இந்திய சாம்ராஜ்ஜியம் மேலும் பரந்துவிரிந்தது. பின்னர், கங்குலி, சேவாக். யுவ்ராஜ், தோனி கோலி என ஒரு நாள் போட்டிகளை சிகரத்துக்கு பலர் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க : U19CWC: இங்கிலாந்தை தோற்கடித்து 5வது முறையாக மகுடம் சூடிய இந்திய ஜூனியர் அணி

டி20யின் வருகைக்குப்பின் ஒருநாள்போட்டிகளுக்கு சற்றே மவுசு குறைந்தாலும், உலகக் கோப்பை என்றால் ODI-தான் எனக் கூறும் நிலை இன்றும் உள்ளது. பல நூறு ஒரு நாள் போட்டிகளை ஆடிய சச்சின், இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமையான தருணம் என இன்றைய ஆயிரமாவது போட்டியை வர்ணித்து, ரோகித்தின் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கான இணைப்புப்பாலம் ஒரு நாள் போட்டிகள் என்றும் கூறியுள்ளார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக என்பதுபோல் ஒரு நாள் போட்டியில் தயங்கித் தயங்கி அடியெடுத்து வைத்த இந்தியா இன்று அனைவரையும் விஞ்சி ஆயிரமாவது போட்டியைத் தொட்டிருப்பது ஒருநாள் போட்டிகளில் அதன் ஆளுமையை உணர்த்துவதாக உள்ளது.

 
Published by:Musthak
First published:

Tags: Cricket

அடுத்த செய்தி