வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வாலுடன் இஷான் கிஷனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் வலை பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மற்றும் 3 உதவியாளர்களுக்கும் தொற்று உறுதியானது.
இதையடுத்து இந்திய அணியில் கூடுதல் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இஷான் கிஷனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீரர்கள் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் கோவிட் 19 வைரஸினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், இவர்கள் எப்போது அணிக்குத் திரும்புவார்கள் என்பது தெரியாது.
ஜனவரி 31 அன்று அகமதாபாத்தில் வந்திறங்கிய இந்திய அணி மூன்று RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அனைத்து கொரோனா பாசிட்டிவ் முடிவுகளும் வெளிவந்தன என்று பிசிசிஐ கூறியது. ஜனவரி 31 அன்று நடந்த முதல் சுற்று சோதனைக்குப் பிறகு தவான் மற்றும் சைனி பாசிட்டிவ். அதே நாள் ஜனவரி 31-ல் கெய்க்வாடுக்கு பாசிட்டிவ். அதே நேரத்தில் ஐயர் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு மூன்றாவது சுற்று சோதனையின் போது புதன்கிழமையன்று கொரோனா பாசிட்டிவ் ஆனது.
இந்நிலையில் மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டதையடுத்து இன்று இஷான் கிஷனும் சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் ஆடி 60 ரன்கள் எடுத்துள்ளார் அதில் இங்கிலாந்துக்கு எதிராக 59 ரன்களை விளாசியதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ட்ரைக் ரேட் 130.
5 டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக இஷான் கிஷன் ஆடியதில் 113 ரன்களை எடுத்துள்ளார். 56 அதிகபட்ச ஸ்கோர், ஸ்ட்ரைக் ரேட் 135.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.