advertisement

ஆடு மேய்க்க சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்... தப்பிக்க முயன்றதால் கொடூர கொலை.. அதிர்ச்சி சம்பவம்!

Last Updated:

திருவாரூரில் ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Rapid Read
பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்
பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்
திருவாரூரில் ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான பெண் தனியாக ஆடு மேய்க்க சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு இருவர் வந்துள்ளனர். மது போதையில் இருந்த அந்த நபர்கள், தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க கடுமையாக போராடியுள்ளார். ஆனால், மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த இருவரும், அந்த பெண்ணை பாண்டவையாற்றில் தள்ளி நீரில் மூழ்கடித்துள்ளனர். அங்கு ஆட்கள் வருவதை கண்டதும் அவர்கள் ஆற்றங்கரையில் இருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர், அருகே சென்று பார்த்த போது ஆடு மேய்க்க சென்ற பெண் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
advertisement
உடனே, அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொரடாச்சேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டது திருவிடைவாசல் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் அஜித்குமார் என்பது தெரியவந்தது.
பின்னர், இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாண்டவையாறு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு வரும் போதை ஆசாமிகளால் பெண்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றுவதுடன், பெண்ணை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்த இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
view comments
தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/
ஆடு மேய்க்க சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்... தப்பிக்க முயன்றதால் கொடூர கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement