Swiggy, Zomato-வில் மதுபானங்கள் டெலிவரி? - டாஸ்மாக் கொடுத்த அதிரடி விளக்கம்
- Published by:Raj Kumar
- news18-tamil
Last Updated:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் வீடு தேடி மதுபானம் டெலிவரி செய்யும் உரிமையை ஸ்விக்கி பெற்றது. அதேபோன்று Zomato, நிறுவனம் ராஞ்சி மட்டுமின்றி அம்மாநிலத்திற்கு உட்பட்ட 7 நகரங்களில் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது.
ஸ்விகி, பிக் பாஸ்கட், ஜொமெட்டோ, பிளிங்இட் தளங்கள் மூலம் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிடவில்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
உணவு பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் உணவோடு, மதுபானத்தையும் டெலிவரி செய்யும் பணியை கடந்த 2020-ஆம் ஆண்டில் தொடங்கின.
மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் அசாமில் அப்போது வழங்கப்பட்ட இந்த ஆன்லைன் மதுபான டெலிவரி சேவை பின்னாளில் நிறுத்தப்பட்டது.
எனினும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் வீடு தேடி மதுபானம் டெலிவரி செய்யும் உரிமையை ஸ்விக்கி பெற்றது. அதேபோன்று Zomato, நிறுவனம் ராஞ்சி மட்டுமின்றி அம்மாநிலத்திற்கு உட்பட்ட 7 நகரங்களில் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளது.
advertisement
இதையும் படிக்க: சர்தார் 2 ஷூட்டிங்கில் விபத்து.. 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து பலியான சண்டை பயிற்சியாளர்!
இதேபோல, நாட்டின் பிற மாநிலங்களுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட Swiggy மற்றும் Zomato நிறுவனங்கள் அதற்கான ஒப்புதலுக்காக 10 மாநில அரசுகளிடம் அனுமதி கோரி விண்ணப்பித்ததாக தகவல் வெளியானது.
டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும், ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்க மாநில அரசுகள் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாகவும் தமிழகத்திலும் இதற்கான அனுமதியை இந்நிறுவனங்கள் கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
advertisement
இந்நிலையில், இந்த செய்திக்கு டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, எந்த புதிய முயற்சியிலும் டாஸ்மாக் இறங்கும் திட்டம் இல்லை என்றும், டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
Location :
Tamil Nadu
First Published :
Jul 17, 2024 12:04 PM IST
தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/
Swiggy, Zomato-வில் மதுபானங்கள் டெலிவரி? - டாஸ்மாக் கொடுத்த அதிரடி விளக்கம்







