Union budget 2025 | வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மதுரையின் புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தொழிற்துறையினர்
- Written by:VETRIVEL
- news18-tamil
- Published by:amudha
Last Updated:
Union budget 2025 | வெளிநாடு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மதுரையின் புறநகரில் உள்ள பகுதிகளை தொழிற்சாலைகள் அமைக்க அரசு தேர்வு செய்ய வேண்டும் என்பது தொழிற்துறையினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் மதுரைக்கு புதிய திட்டங்கள் இல்லையென்றாலும், கிடப்பில் கிடக்கும் பல திட்டங்களை செயல்படுத்தினாலே போதுமென தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்க வேண்டிய 15 சதவீத நிதியை இந்த ஆண்டு பாதியும், அடுத்த ஆண்டு பாதியும் ஒதுக்கினால்தான், திட்டமிட்டப்படி 2027 மார்ச்சுக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இதேபோல், மதுரை மெட்ரோ ரயில் பாதைக்கு கணக்கிடப்பட்டுள்ள 11 ஆயிரத்து 500 கோடி ரூபாயில், மத்திய அரசு 20 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்க முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதும் மதுரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.
advertisement
2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட National institute of pharmaceutical education and research பணிகள் மதுரையை தவிர மற்ற 7 இடங்களில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. மதுரையில் 116 ஏக்கரில் சுற்றுவேலி அமைத்ததுடன் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான முழு நிதியை ஒதுக்கி பணியை முடித்துத் தரவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஓதுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வந்தால் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறுகிறார்கள் வர்த்தகர்கள்.
advertisement
இதையும் படிக்க: Gas Cylinder Price | பட்ஜெட் நாளன்று வந்த சூப்பர் அறிவிப்பு... குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை
மதுரையில் 3 தொழிற்பேட்டைகள் மட்டுமே உள்ளதால், கூடுதல் தொழிற்பேட்டைகளை உருவாக்கி அவற்றில் தொழில் துவங்க பிணையில்லா கடனுதவியும் தர கோரிக்கை வைத்துள்ளார் மடீட்சியா தலைவர் கோடீஸ்வரன்.
வங்கிகள் மூலம் சோலார் பேனல் அமைக்க 25 சதவீதம் மானியம் தர வேண்டும் என்பதும், இது சிறுகுறு தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
advertisement
புதிதாக வரும் தனியார் தொழில் பூங்காவில் சாலை, மின்சார வசதி உள்ளிட்டவை அமைப்பதற்கு 50 சதவீதத்தில் 90 சதவீதமாக மானியம் உயர்த்தி தர தொழில் நிறுவனங்கள் கோரி உள்ளனர்.
இதையும் படிக்க: Gold Rate Today | புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய சவரன்!
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், மதுரையின் புறநகரில் உள்ள பகுதிகளை தொழிற்சாலைகள் அமைக்க அரசு தேர்வு செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
Location :
Madurai,Tamil Nadu
First Published :
Feb 01, 2025 10:23 AM IST
தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/
Union budget 2025 | வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மதுரையின் புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் - தொழிற்துறையினர்







