IPL 2025 : ஆர்சிபி வெற்றியை கொண்டாடிய கேஜிஎஃப் பட இயக்குநர்.. வைரலாகும் வீடியோ..
- Published by:Musthak
- news18-tamil
Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றதை, கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் உற்சாகத்துடன் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
advertisement
18 ஆண்டுகளாக ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாத நிலையில், முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
advertisement
இந்நிலையில், கேஜிஎஃப், சலார் படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல், ஆர்சிபி அணியின் வெற்றியை உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
advertisement
Prashant Neel celebration 🥹❤️#RCBvsPBKS #IPLFinals #ViratKohli????pic.twitter.com/yOHaWB6P6R
— MNV Gowda (@MNVGowda) June 3, 2025
இன்றைக்கு அவர் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், பிரசாந்த் நீலின் ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து உள்ளார்கள்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :
Tamil Nadu
First Published :
Jun 04, 2025 5:56 PM IST
தமிழ் செய்திகள்/விளையாட்டு/IPL/
IPL 2025 : ஆர்சிபி வெற்றியை கொண்டாடிய கேஜிஎஃப் பட இயக்குநர்.. வைரலாகும் வீடியோ..





