advertisement

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை.. 5 ஆவது இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

Last Updated:

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஜெய்ஸ்வால் வெளிப்படுத்திய நிலையில், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று பவுலர் குல்தீப் யாதவும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பின்தங்கியுள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 5 ஆம் இடம் பிடித்துள்ள ஜெய்ஸ்வால் 791 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
டெஸ்ட் பவுலர்களில் குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 14 ஆவது இடத்தில் உள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களில் கேப்டன் சுப்மன் கில் முதலிடம் வகிக்கிறார். 753 புள்ளிகளுடன் இந்திய அணியின் ரிஷப் பந்த் 8 ஆம் இடம் வகிக்கிறார்.
advertisement
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆப்கன் அணியின் இப்ராகிம் ஜத்ரான் 764 புள்ளிகளுடன் 8 இடங்கள் முன்னேறி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார். 756 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 3 ஆம் இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய தொடருடன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஓய்வு அறிவிப்பு? - பிசிசிஐ வெளியிட்ட அப்டேட்!
அடுத்தடுத்த இடஙகளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம், விராட் கோலி ஆகியோர் உள்ளனர். பவுலர்கள் தரவரிசையில் ஒருநாள் போட்டிகளில் ரஷித் கான் 710 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். 2 ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் கேஷவ் மகாராஜ், 3 ஆம் இடத்தில் இலங்கையின் மஹீஷ் தீக்சனா, இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோர் உள்ளனர்.
advertisement
ஒருநாள் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கன் அணியின் அஸ்மதுல்லா ஒமர்சாய் முதலிடம் வகிக்கிறார்.
Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
view comments
தமிழ் செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை.. 5 ஆவது இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேற்றம்
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement