advertisement

மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க டிக்கெட் எவ்வளவு?

Last Updated:

Madurai meenakshi thirukalyanam | மதுரை மீனாட்சி கல்யாணம் பார்க்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து புக் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் மே 8ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என இரு கட்டணச்சீட்டுக்கள் வழங்கப்பட உள்ளன. ரூ.200, ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணச்சீட்டு பெறாதவர்கள் இடவசதிக்கு ஏற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள்.
https://hrce.tn.gov.in மற்றும் https://madurai meenakshi.hrce.tn.gov.in என்ற இணையதளங்களில் ஏப்ரல் 29 முதல் மே 2 வரை முன்பதிவு செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.500 கட்டணச்சீட்டு ஒரு நபருக்கு இரண்டும், ரூ.200 கட்டணச்சீட்டு மூன்றும் பெற்றுக்கொள்ளலாம் என்றும்,  ஒரே நபர் இரண்டையும் பெற இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
advertisement
ஆதார், மொபைல் எண், அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களை அளிக்க வேண்டும். மேலும், கோவில் அருகே மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கு விடுதியில் நேரடியாகவும் கட்டணச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
view comments
தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/
மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி திருக்கல்யாணம் பார்க்க டிக்கெட் எவ்வளவு?
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement