மதுரை கள்ளழகர் கோவிலில் விமர்சையாக நடந்த குடமுழுக்கு!
- Reported by:VETRIVEL
- news18-tamil
- Published by:Vaijayanthi S
Last Updated:
Madurai Kallazhagar temple | மதுரை அழகர்கோயில் கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்திற்கு கோவிந்தா கோஷம் முழங்க வெகு விமரிசையாக குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற அழகர்கோயில் ஶ்ரீகள்ளழகர் திருக்கோவில் ராஜகோபுரம் 7 நிலைகளும், 7 கலசங்களும் கொண்டு 120 அடி உயரத்திற்கு மலைகளின் பின்னணியில் மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

நிரந்தரமாக அடைக்கப்பட்டிருக்கும் இந்த கோபுர வாசல் கதவில் கருப்பண்ணசாமி உறைவதால் இது பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோபுரம் எனவும் அழைக்கப்படும்.

இந்த கோபுரத்திற்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடத்துவதற்காக கடந்த 2022 மார்ச் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கின.
advertisement

ரூ.2 கோடி மதிப்பீட்டில் பழமையான முறைப்படி, கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களை கொண்டு நடைபெற்ற புனரமைப்பு பணிகளால் கோபுரம் புதுப்பொலிவு பெற்றதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதி குடமுழுக்கிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நேற்று, அழகர்கோயில் மலையில் இருந்து நூபுரகங்கை தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, 8 யாகசாலை ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
advertisement

இன்று காலை 9 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து எடுத்து செல்லப்பட்ட புனித தீர்த்தம் கோவிலை வலம்வந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.

பின் சரியாக 9:45 மணியளவில் கோபுர கலசங்களுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்று புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் கோபுரத்திற்கும், கோவில் வளாகம் முழுவதும் மலர் தூவப்பட்டது.
advertisement

விழாவை காண தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பரவசத்துடன் தரிசித்து மகிழ்ந்தனர்.

பக்தர்கள் புனித நீர் பெறுவதற்கு ஏதுவாக ஆகாங்கே செயற்கை நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டிருந்ததால் தள்ளுமுள்ளு இன்றி தரிசனம் செய்தனர்.
advertisement

கலசம்
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
Location :
Madurai,Tamil Nadu
First Published :
Nov 23, 2023 4:32 PM IST










