மதுர குலுங்க குலுங்க.. கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா!
- Reported by:VETRIVEL
- news18-tamil
- Published by:Anupriyam K
Last Updated:
மதுரை சித்திரைப் பெருவிழா இன்று துவங்கி மே 16 வரை 20 நாட்கள் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் விழா கொடியேற்றம் இன்று காலை 10:35-10:59 மணிக்குள் நடைபெற்றது.
மதுரை சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவிற்காக மதுரை மக்கள் மட்டுமல்லாது மற்ற மாநில மக்களும் ஆவலாக காத்திருந்தனர். சித்திரை வந்தாலே போதும், முதலில் நினைவுக்கு வருவது மதுரை திருவிழா தான். இந்த 10 நாள் திருவிழாவில் மொத்த மதுரையும் விழா கோலம் பூண்டும்.
பார்வதி தேவியின் அவதாரமான மீனாட்சி, மதுரை பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து, பட்டத்து அரசியாக மகுடம் சூடி, தேவா்களை போரில் வென்று, கடைசியாக சிவபெருமானை மணம் முடித்ததாக வரலாறு கூறுகிறது. இதனால் இந்த கோயிலில் மீனாட்சிக்கே சிறப்புண்டு.
advertisement
அந்த வகையில் இந்த சித்திரை பெருவிழா தற்போது கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இன்று ஏப்ரல் 29 முதல் மே 10 வரை மீனாட்சி அம்மன் கோவில் விழாக்களும், மே 8 முதல் 17 வரை அழகர்கோவில் விழாக்களும் நடைபெறும். காலை 10:35 மணியிலிருந்து 10:59 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபத்தில் தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

advertisement
இதனை தொடர்ந்து இன்று முதல் தினமும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி - சொக்கநாதர் வீதியுலா நடைபெறும். அந்த வகையில், மே 6ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், மே 8ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், மே 9ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும். இதே போன்று மே 11 ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவையும், மே 12ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இந்த பெருந்திருவிழா தொடங்கியதையடுத்து மதுரை மக்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
Location :
Tamil Nadu
First Published :
Apr 29, 2025 11:40 AM IST
தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/
மதுர குலுங்க குலுங்க.. கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா!









