advertisement

மதுரை சித்திரை திருவிழா.. நீர், மோர் வழங்குபவர்கள் அனுமதி பெற வேண்டுமாம்!

Last Updated:

Madurai chithirai festival | மதுரை சித்திரை திருவிழாவில், பக்தர்கள் நீர், மோர், அன்னதானம் வழங்குபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழா
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அன்னதானம், நீர் மோர் வழங்குபவர்கள் செயற்கை சாயத்தை சேர்க்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 28 தேதி முதல் மே-16ம் தேதி வரை சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெறவுள்ள நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் தொடர்பான மண்டகபடிகளில் மற்றும் இதர இடங்களில் பக்தர்களால் அன்னதானம், பிரசாத உணவுகள், சர்பத், நீர் மோர், இனிப்புகள் மற்றும் குடிநீர் வழங்கப்படும்.
இதில் செயற்கை சாயங்கள் எதுவும் சேர்க்காமல் சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும். அதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
advertisement
அன்னதானம் வழங்குபவர்கள் மற்றும் பெறுபவர்கள் சாப்பிட்ட பின்பு அன்னதானம் வழங்கும் இடங்களில் சேரும் கழிவுகள் முறையாக சேகரித்து மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும்.
திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இணைய வழியில்(Online) மூலம் ரூ.100/- கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி (பதிவுச் சான்றிதழ்) பெற்று மட்டுமே வழங்க வேண்டும்.
advertisement
மேலும், உணவு மற்றும் உணவுப் பொருள் தொடர்பான புகார்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை (Whatsapp No.) எண்.9444042322-ல் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம்.அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்பு சட்ட பதிவுச்சான்றிதழ் பெறுவதற்கு தேவையான விபரங்களை 0452-2640036 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
view comments
தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/
மதுரை சித்திரை திருவிழா.. நீர், மோர் வழங்குபவர்கள் அனுமதி பெற வேண்டுமாம்!
Next Article
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு தர்ம அடி... போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார்...
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு தர்ம அடி... போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார்...
  • உதகையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர்

  • உறவினர்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த நபர் மீது போக்சோ

  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement