கரன்டெல்லிக்காக 58 பதக்கங்கள் வென்றுள்ளேன்- எனக்கு உதவியது உ.பி.அரசுதான் - ஆம் ஆத்மியைத் தாக்கும் திவ்யா கரன்
காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தம் வெண்கலம் வென்ற திவ்யா கரன், தான் டெல்லிக்காக பதக்கங்களை வென்று கொடுத்தாலும் தன்னால் டெல்லி அரசு தனக்கு எந்த வித ஆதரவையும் அளிக்கவில்லை, அதனால் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்றேன் என்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் திவ்யா கரன், “2001-ல் டெல்லிக்கு வந்தேன், 2006-ல் மல்யுத்தம் விளையாட ஆரம்பித்தேன். கோகல்பூரில் 22 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். என் தந்தை எப்படியோ என் மல்யுத்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். நான் பணம் சம்பாதிப்பதற்காக ஆண்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டேன்.
2011-ல் டெல்லிக்காக வெண்கலம் வென்றேன். 2017 வரை நான் 58 பதக்கங்களை டெல்லிக்காக வென்று கொடுத்துள்ளேன். மனோஜ் திவாரி மட்டுமே எனக்கு ரூ.3 லட்சம் அளித்தார். அந்தப் பணம்தான் எனக்கு பேருதவியாக அமைந்தது.
டெல்லி அரசு துளியும் உதவி செய்யவில்லை. நாங்கள் எங்கள் நிலைமை குறித்து எவ்வளவோ மன்றாடினோம். அதன் பிறகுதான் உத்தரப் பிரதேசம் சென்றோம்” என்று பரபரப்பு பேட்டியளித்தார்.
உ.பி. முதல்வர் ராணி லஷ்மிபாய் விருது கொடுத்து ரூ.3.11,000 தொகைக்கான காசோலையை திவ்யா கரனுக்கு வழங்கினார்.
“உ.பி.அரசுதான் எனக்கு உதவியது, பென்ஷனுக்கும் ஏற்பாடு செய்தது” என்கிறார் திவ்யா கரன்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பும் திவ்யா கரன் 2017 முதல் உத்தரப்பிரதேசத்தைத்தான் பிரதிநிதித்துவம் செய்வதாக உறுதி செய்தது.
ஆனால் டெல்லி அரசு இவரது குற்றச்சாட்டை மறுத்து 2010-11 முதல் 2016/17 வரை ரூ5,000, ரூ. 10,000 ரூ. 1 லட்சம், ரூ. 42,000 மற்றும் 42,000 கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, Delhi, Uttar pradesh, Yogi adityanath