பாமக செயலாளர் தேவமணி படுகொலை - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி
- Published by:Ramprasath H
- news18-tamil
Last Updated:
காரைக்காலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பாமக மாவட்ட செயலாளரை கொலையாளிகள் துரத்துவதும், படு கொலை செய்து விட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
காரைக்கால் மாவட்ட பா.ம.க செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் நீண்டகாலமாக பாமக செயலாளராக தேவமணி(வயது53) இருந்து வந்தார். இவரது வீடு திருநள்ளார் மெயின் சாலை சுரக்குடி சந்திப்பு அருகே உள்ளது. இவரது கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகில் அதே மெயின் சாலையில் உள்ளது. நேற்று இரவு 10.00 மணி கட்சி அலுவலகத்தில் இருந்து, தேவமணி வீடு நோக்கி அவரது ஆதரவாளர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், தேவமணி வீட்டுக்கு நூறு மீட்டர் தூரம் உள்ள நிலையில், மோட்டார் சைக்கிளை வழிமறித்து, தேவமணியை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து, தேவமணியை நண்பர்கள், ஆதரவாளர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவமணி இறந்து போனார்.
advertisement
இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் அருகே பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் காரைக்கால் மாவட்டத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதுதொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சி ஒன்று பதிவு வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் தேவமணியை துரத்தி செல்வதும், பின்னர் கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Location :
First Published :
Oct 23, 2021 10:22 AM IST
தமிழ் செய்திகள்/ செய்திகள்/Live Updates/
பாமக செயலாளர் தேவமணி படுகொலை - அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி





