முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / DRDO Recruitment: இளநிலை ஆராய்ச்சி(JRF) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

DRDO Recruitment: இளநிலை ஆராய்ச்சி(JRF) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பபடிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.drdo.gov.in/careers என்ற இணையதாத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பபடிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.drdo.gov.in/careers என்ற இணையதாத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பபடிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.drdo.gov.in/careers என்ற இணையதாத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்  (DRDO) இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் (Junior Research Fellow) பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கல்வித்தகுதி:Computer Science and Engineering/Technology, Computer Science and Automation Engineering/Technology, Computer Science/Technology and Informatics Engineering,

Computer Science and System Engineering,

Computer Science and Information Technology,

Information Technology, Computer Science/Engineering/Technology,  Software Engineering/Technology,  Information Science and Engineering/Technology, Computer and Communication Engineering,  Computer Networking ஆகிய பாடப்பிரிவில் பல்கலைக்கழக மானியக் குழு/ AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலே குறிப்பிடபட்டுள்ள பாடங்களில் தகுந்த கேட்/நெட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன்  தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

(அல்லது)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடப் பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 31,000 -த்துடன் அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற இதர சலுகைகள் வழங்கப்படும்.

jrf.ceptam@gov.in on என்ற மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க  வேண்டும்.

ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் .

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.drdo.gov.in/careers என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், கேட் தேர்வு மதிப்பெண் அட்டை, வயது சான்று உள்ளிட்ட நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

முழு விபரங்கள் அறிய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

இதரபிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

First published:

Tags: DRDO