advertisement

Oxygen Crisis in India: தடையற்ற ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஜிண்டாலுக்கு தொழிற்துறை பாராட்டு

Last Updated:

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சப்ளை பெரும் தட்டுப்பாடு கண்டுள்ளது, இந்நிலையில் மருத்துவ பிராணவாயுவை அளிக்க முன் வந்துள்ள முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஜிண்டால் உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு [Confederation of All India Traders (CAIT)] பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன்

அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சி. பர்த்தியா, செயலர் பிரவீண் கந்தேல்வால், ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று இந்தியாவின் டாப் தொழிலதிபர்கள் தடையற்ற ஆக்சிஜன் சப்ளைக்கு முன் வந்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஸ்டீல் தொழிலதிபர் நவீன் ஜிண்டால், வேதாந்தா குழும சேர்மன் அனில் அகர்வால், இந்தியன் ஆயில் சேர்மன் மாதவ் வைத்தியா, பாரத் பெட்ரோலியம் சேர்மன் கே.பத்மாகர், செய்ல் நிறுவன சேர்மன் சோமா மோண்டால், சஜ்ஜன் ஜிண்டால், ஆகியோர் ஆக்சிஜன் சப்ளையில் பிரமாதமான பணிகளை செய்துள்ளனர் என்று அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு பேரவை பாராட்டியுள்ளது.
advertisement
“பெரிய கார்ப்பரேட்கள் தாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடினால் ஒட்டுமொத்த நாடுமே திக்குமுக்காடும் சூழ்நிலையில் இவர்க்ள் உதவ முன் வந்திருப்பது அரும்பெரும் காரியம்” என்று வர்த்தகக் கூட்டமைப்பு பாராட்டியுள்ளது.
கார்ப்பரேட்களுடன் நமக்கு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் கஷ்டங்களை உணர்ந்து எழுந்து நின்று உதவுகின்றனர். இவர்களுக்கு தேசம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது, அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது அவசியம்” என்று கந்தேல்வால் கூறியுள்ளார்.
மேலும் வர்த்தகக் கூட்டமைப்புக் கூறும்போது, “இந்த இக்கட்டான நேரத்தில் அயல்நாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் உதவ முன்வரவில்லை. ஆனால் அவர்கள் இங்கிருந்துதான் பெரிய அளவில் வருவாய் ஈட்டுகிறார்கள். மேலும் இவர்கள் இந்தியச் சட்டங்களை மதிப்பதில்லை மீறுகின்றனர். முறையற்ற விதங்களிலும் அவர்கள் பெரிய வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்திய தொழில்துறையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பார்க்கின்றனர், ஆனால் இவர்கள் நாட்டின் நெருக்கடிக்கு உதவவில்லை, நம் நாட்டு கார்ப்பரேட்கள்தான் உதவுகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
view comments
தமிழ் செய்திகள்/ செய்திகள்/கொரோனா/
Oxygen Crisis in India: தடையற்ற ஆக்சிஜன் சப்ளைக்கு உதவும் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஜிண்டாலுக்கு தொழிற்துறை பாராட்டு
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement