advertisement

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

Last Updated:

தொன்மை வாய்ந்த மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை மாநகராட்சியும், அறநிலைத்துறையும் உடனடியாக பராமரித்து கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை

மதுரை தெப்பக்குளம்
மதுரை தெப்பக்குளம்
மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, மதுரை வைகை ஆற்றில் உள்ள தடுப்பணையிலிருந்து பனையூர் கால்வாய் வழியாக மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வாய்க்கால் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது தெப்பக்குளத்திற்கு கால்வாய் வழியாக செல்லக்கூடிய வைகை ஆற்றின் நீரில் கழிவுநீர் கலந்து செல்வதன் காரணமாக போதிய ஆக்சிஜன் கிடைக்காத நிலையில் மீன்கள செத்து மிதக்கிறது.
மேலும், தெப்பக்குளத்தை சுற்றிலும் மாலை நேரங்களில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளை தெப்பக்குளத்துக்குள் போடுவதாலும் அங்கு வரக்கூடிய பொதுமக்கள் தேவையற்ற உணவுகளை தெப்பக்குளத்தில் வீசுவதாலும் மீன்கள் செத்து மிதக்கும் நிலை காணப்படுகிறது. தொன்மை வாய்ந்த மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை மாநகராட்சியும், அறநிலைத்துறையும் உடனடியாக பராமரித்து கண்காணிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
view comments
தமிழ் செய்திகள்/மதுரை/
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement