advertisement

கலர்கலராய் தயாராகும் கோரைப்பாய்... தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் காடையாம்பட்டி...

Last Updated:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியில் கோரைப்பாய் அதிகம் தயாரிக்கப்படுகிறது.

+
கோரைப்பாய்

கோரைப்பாய் தயாரிப்பு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் கோரைப்பாய் தொழிலைச் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலேயே அதிகமாகக் கோரைப்புற்கள் விளைவிக்கும் இடம் கரூர் மற்றும் முசிறி. கரூர் மாவட்டத்தில் காவிரி நீர் பாசனத்தில் நெல் பயிர்களைப் போல கோரைப்புற்களை விளைவித்து அறுவடை செய்கின்றனர். பின்னர் பிற மாவட்டம், வெளிமாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
பின்னர் கோரைப்பாய் தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரைப்புற்களை வாங்கி செல்கின்றனர். பின்னர் பத்து நாட்களுக்கு மேல் உலர்த்தி சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்யப்பட்ட கோரைப்புற்களை சாயப்பட்டறையில் வைத்து நிறம் (மஞ்சள், சிவப்பு , நீலம்) பூசப்படுகிறது.
advertisement
நிறம் பூசப்பட்ட பிறகு வெயிலில் உலர்த்தி பாய் தயாரிக்க கோரைப்புற்கள் தயார் செய்யப்படுகிறது. மினி ஜகாடு எனும் இயந்திரம் மூலம் நெய்யப்படுகிறது. மாதம் 2000 பாய் வீதம் தயாரிக்கப்படுகிறது. பின்பு தயாரிக்கப்பட்ட பாய்கள் அனைத்தும் தையல் முறை மூலம் பாயின் இருபுறமும் 1.5 அளவில் துணி வைத்துத் தைக்கப்படுகிறது. பின்னர் கோரைப்பாய் முழுவதுமாக தயார் செய்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
advertisement
கோரைப்பாய் தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் கூறுகையில், “இந்த நவீன காலத்தில் கோரைப்பாய்கள் அதிகம் உபயோகிக்கப்படுவதில்லை இருந்தாலும் இதனுடைய அருமை, பெருமை தெரிந்தவர்கள் உபயோகம் செய்கிறார்கள். இந்த கோரைப்பாய் உபயோகித்தால் நமது உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். வெப்பக் காலங்களில் உடல் சூட்டைத் தணிக்கும் மற்றும் முதுகு தண்டுவட பிரச்சனை நாளடைவில் சரியாகும். இத்தனை மருத்துவ குணம் அடங்கிய கோரைப்பாயினை அனைவரும் உபயோகித்து நலிவடைந்து வரும் கோரைப்பாய் தொழிலை மேம்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
advertisement
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், மத்திய பட்ஜெட் 2026, தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
view comments
தமிழ் செய்திகள்/வணிகம்/
கலர்கலராய் தயாராகும் கோரைப்பாய்... தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் காடையாம்பட்டி...
Next Article
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement