திருப்பரங்குன்றம் மலையில் கோயில் எங்கே உள்ளது...? தர்கா எங்கே உள்ளது...? தீபத்தூண் சர்ச்சை ஏன் எழுந்தது?
- Written by:VETRIVEL
- news18-tamil
- Published by:amudha
Last Updated:
மதுரையில் அசாதாரண சூழலை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் மலையில், கோயில் எங்கே உள்ளது? தர்கா எங்கே உள்ளது? தீபத்தூண் சர்ச்சை ஏன் எழுந்தது? ஆகியவை குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், குடைவரை அமைப்பில் உருவாக்கப்பட்டது. அதில், முருகனின் கருவறை உள்ள இடத்தில் இருந்து நேராக மலையின் மேலே உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது. இங்குதான், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றப்படுகிறது.
advertisement
advertisement
advertisement
advertisement
இந்நிலையில், இந்துத்துவா அமைப்பினர் தீபம் ஏற்ற வேண்டும் என உரிமை கோரும் தீபத்தூண், தர்காவில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ளது. இதில் தீபம் ஏற்றுவதற்கு, தர்காவிற்கு செல்லும் பாதையைத்தான் பயன்படுத்த முடியும். அது தீபத்தூண் என்பதற்கு இதுவரை எந்த சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
advertisement
advertisement
advertisement







