advertisement

சங்கரா.. மத்தி.. சூரை.. இந்த மீன்களை பார்த்தால் உடனே வாங்கிடுங்க.. ’ஒமேகா 3’ அதிகம் கொண்ட மீன்கள்..!

Last Updated:
சுவையால் மட்டுமே மீனை எடை போட்டுவிட முடியாது. அதன் அலப்பறிய நன்மைகளாலும் அசைவத்தில் தனித்துவ இடத்தை பெற்றுள்ளது.
1/6
 அசைவ உணவுகளில் கடல் மீன்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. மீன் என்னும் பெயர் ஒன்றாக இருந்தாலும் அதன் ஒவ்வொன்றிலும் இருக்கும் சுவை வெவ்வேறு நா அனுபவத்தை தரும். அப்படி அனைத்து கடல் மீன்களையும் சுவைத்தே ஆக வேண்டும் என பட்டியல் போட்டு ஒவ்வொரு மீனாக சுவைப்போரும் இருக்கிறார்கள். சுவையால் மட்டுமே மீனை எடை போட்டுவிட முடியாது. அதன் அலப்பறிய நன்மைகளாலும் அசைவத்தில் தனித்துவ இடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக உடலுக்கு முக்கிய தேவையான ஒமேகா 3 அமிலம் மீன்களிலிருந்துதான் அதிகம் கிடைக்கிறது. அப்படி எந்தெந்த மீன்களை சுவைக்காக மட்டுமன்றி அதன் நன்மைகளுக்காகவும் மிஸ் பண்ணிடக்கூடாது என்பதை பார்க்கலாம்.

2/6
 ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஏன் அவசியம்..? ஒமேகா 3 உடலுக்கு மிகவும் தேவையான கொழுப்பு அமிலமாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கவும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக இரத்தம் உறைதல் பிரச்சனை வராமல் இருக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அவசியமாகும். இதயத்தின் செயல்பாடுகளை சீராக வைப்பது, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மூட்டு, எலும்பு பிரச்சனைகளை சீராக்குதல் என எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது. உடல் சார்ந்து மட்டுமல்லாது மனச்சோர்ர்வு, மன அழுத்த பிரச்சனைகள், அடிக்கடி மாறும் மனநிலைகளை சரி செய்யவும் ஒமேகா 3 உதவுகிறது.

3/6
 ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களிலிருந்துதான் மீன் எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த ஊட்டச்சத்தை பெற சப்ளிமெண்டாக எடுத்துக்கொள்வதை காட்டிலும் மீனாகவே செய்து சாப்பிடலாம். கர்ப்பிணிகளுக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைவாக இருந்தால் கரு வளர்ச்சி மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவேதான் மருத்துவர்களும் தவறாமல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் எண்ணெய் மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர்.

4/6
 எந்தெந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது..? பொதுவாகவே சிறிய வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவை கடல்பாசியை அதிகமாக உண்டு வாழ்வதால் ஒமேகா 3 அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் சால்மன் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக இருக்கிறது. அதோடு அதில் புரதச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின் மற்றும் வைட்டமின்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது. எனவேதான் இந்த மீனுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது.

5/6
 விலை குறைந்த மீன் வகைகளில் கானாங்கெளுத்தி சிறந்தது. இதில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் பி5 மற்றும் பி6 , ஜிங்க், மெக்னீசியம் , பாஸ்பரஸ் , சோடியம் மற்றும் நல்ல கொழுப்புகளின் அளவு அதிகமாக உள்ளது. எனவே இந்த மீனை அடுத்த முறை பார்த்தால் கண்டிப்பாக வாங்குங்கள். உடல் எடை குறைப்பவர்களுக்கும் கானாங்கெளுத்தி நல்ல உணவாக இருக்கும்.

6/6
 அடுத்ததாக மத்தி, சாளை மீன், சங்கரா மீன், நெத்திலி, சூரை மீன், மத்தி மீன் ஆகியவற்றிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைவாக உள்ளன. இவற்றில் முள் அதிகமாக இருப்பதால் பெரும்பாலும் இந்த மீன்களை தவிர்ப்போர் அதிகம். அதேசமயம் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய இந்த மீன்களில்தான் நன்மைகள் நிறைவாக உள்ளன. எனவே அடுத்த முறை முள்ளுக்காக அவற்றை ஒதுக்காமல் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளுக்காக வாங்கி சாப்பிடுங்கள்.

Silver Loan | தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம்.. வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? RBI முக்கிய அறிவிப்பு!
இனி வெள்ளியும் அடகு வைக்கலாம்.. எவ்வளவு கடன் கிடைக்கும்?
  • வெள்ளி அடகு கடன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

  • வெள்ளி நகைகள் 10 கிலோ, நாணயங்கள் 500 கிராம் வரை கடன் கிடைக்கும்.

  • 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடனுக்கு வெள்ளியின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன்.

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement