நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் : தினம் ஒன்று சாப்பிடுங்கள்..!
- Published by:Sivaranjani E
- news18-tamil
Last Updated:
கொரோனா நெருக்கடி நிலையில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையிலான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பது அவசியமாகிறது.
கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் மிகவும் தீவிரமாகி வருகிறது. கொரோனா முதல் அலையில் அவ்வளவாக பாதிக்கப்படாத குழந்தைகள் மற்றும் இளவயதினர் கூட இந்த இரண்டாம் அலையில் சிக்கி ஏராளமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையிலான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பது அவசியமாகிறது.
advertisement
ஏனென்றால் தொற்று நோய்களுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்கான ரகசியம் ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை நம் உடல் பெற்றிருப்பதே. தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உடலின் இயற்கையான திறனை மேம்படுத்துவதன் மூலம் தொற்றுநோய்களுக்கு எதிராக ஒரு நல்ல எதிர்ப்பை உடலில் ஏற்படுத்த முடியும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தியானது மோசமான ஊட்டச்சத்து உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது. கூடுதல் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் சில உணவுகள் பற்றி பார்க்கலாம்.
advertisement
நெல்லி: பல நூற்றாண்டுகளாக நோய் தொற்றுகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த வீட்டு மருந்தாக நெல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெல்லியில் நிறைந்து காணப்படும் வைட்டமின் சி, உடலில் வெள்ளை ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. இது நோய் தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது. வைட்டமின் ஏ, பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட சத்துகளும் நெல்லிக்காயில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் அருமருந்தாக கருதப்படுகிறது நெல்லிக்காய்.
advertisement
ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி உயிரணுக்களை பாதுகாப்பதன் மூலமும், நோயெதிர்ப்பு உயிரணு வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும் நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலங்களை மேம்படுத்துகிறது. பொதுவாகவே சிட்ரஸ் பழங்களில் கால்சியம், பொட்டாசியம், ஃபோலேட், தைமின் மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருக்கும். ஆரஞ்சுடன் மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
advertisement
கொய்யா : மலிவான விலையில் அதிக அளவு விற்கப்படும் மிகவும் சத்தான பழங்களில் ஒன்றான கொய்யாவில் வைட்டமின் சி அதிகம். ஆரஞ்சுகளில் உள்ள வைட்டமின் சி அளவை விட4 மடங்கு கொய்யாவில் அதிகமாக உள்ளது. கொய்யாவிலிருக்கும் குர்செடின், லைகோபீன், வைட்டமின் சி மற்றும் பிற பாலிஃபோன்கள் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருக்கிறது.
advertisement
advertisement
advertisement
மஞ்சள் : அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்ட செயலில் உள்ள மூலப்பொருள் குர்குமின் இருப்பதனால் மஞ்சள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சுவாசக் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலை போக்க மஞ்சள் உதவும். சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வைரஸால் ஏற்படும் சேதங்களுக்கு காரணமான பல அழற்சி மூலக்கூறுகளை மஞ்சளில் உள்ள குர்குமின் குறைக்கிறது. இது உடலுக்கு வைரஸ் தடுப்பு பண்புகளை வழங்குகிறது.
advertisement
துளசி இலைகள் : வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் ஏராளமாக உள்ளதால் இது இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்களை தடுக்கிறது. சக்திவாய்ந்த ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளை துளசி கொண்டுள்ளது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில், 2-3 பிரஷ்ஷான துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி கூடுவதை உணரலாம்.
advertisement
advertisement
துத்தநாகம், வைட்டமின் சி, வைட்டமின் டி, குளுட்டமைன் ஆகியவை வைரஸுக்கு எதிராக போராட உதவும் சில கூடுதல் பொருட்கள். இவற்றை மருத்துவ நிபுணர்களின் அறிவுரையோடு எடுத்து கொள்ளலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க Kadha என்ற பானத்தையும் நீங்கள் பருகலாம். Kadha ரெசிபிகளில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் பல சேர்க்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. நெல்லி, இஞ்சி மற்றும் கிரீன் டீ பயன்படுத்தி இதை தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
advertisement








