உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் ஆளி விதை சாப்பிடவே கூடாது..!
- Published by:Sivaranjani E
- news18-tamil
Last Updated:
ஆளி விதைகளை சாப்பிட்ட உடனேயே சிலருக்கு அலர்ஜிக் ரியாக்ஷன்கள் ஏற்படும். இதனை ஒருவர் அலட்சியம் செய்ய கூடாது.
advertisement
ஆளி விதைகளில் நல்ல கொழுப்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், புரதம் மற்றும் ஃபைபர்சத்து, காப்பர், ஜிங்க் போன்ற நன்மை பயக்கும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. நமது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ஆளி விதைகள் உதவுகின்றன. மேலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, எடையை குறைக்க, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அதனை குறைக்க மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ஆளி விதைகள் உறுதுணையாக இருக்கின்றன.
advertisement
advertisement
வீக்கம்: ஆளிவிதைகள் தரும் முக்கிய நன்மைகளில் ஒன்று, அவை வீக்கத்தைக் குறைக்க உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கின்றன. இது வீக்கத்தை குறைக்க உதவும் அதே நேரத்தில் சில சந்தர்ப்பங்களில் அல்லது அதிகமாக எடுத்து கொள்ளும் போது உடலில் வீக்கத்தை குறைக்க உதவும் ஆளி விதைகளே அதனை அதிகரிக்கவும் செய்ய கூடும் என்கிறது அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்.
advertisement
அலர்ஜி: ஆளி விதைகளை சாப்பிட்ட உடனேயே சிலருக்கு அலர்ஜிக் ரியாக்ஷன்கள் ஏற்படும். இதனை ஒருவர் அலட்சியம் செய்ய கூடாது. இந்த விதைகளை எடுத்து கொண்ட சிறிது நேரத்திலேயே உடலின் எந்தப் பகுதியிலாவது ரேஷஸ், சருமம் சிவத்தல், வீக்கம் அல்லது அரிப்பு, எரிச்சல் அல்லது வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
advertisement
கர்ப்ப காலத்தில்...பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் ஆளி விதைகளை எடுத்து கொள்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. ஏனென்றால் கர்ப்பத்தின் போது ஆளி விதைகளை எடுத்து கொள்வது ஹார்மோன் சமநிலையை பாதிக்கும் ஆளி விதைகளை கர்ப்ப காலத்தில் எடுத்து கொள்வது மிகவும் ஆபத்தானது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கருதுகிறார்கள்.
advertisement
கர்ப்பமாக முயற்சித்தால்... சில சந்தர்ப்பங்களில் ஹார்மோன்கள் மீது மோசமான விளைவை ஆளி விதைகள் ஏற்படுத்துகின்றன, எனவே இந்த விளைவு கருத்தரிப்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். ஆளி விதைகளை சாப்பிட்டு கொண்டிருக்கும் பெண்கள் கருத்தரிக்க விரும்பினால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த விதைகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
advertisement
ஸ்க்லரோடெர்மா (scleroderma) நிலையால் பாதிக்கப்பட்டவர்கள்... ஆளி விதைகளை தண்ணீரில் அல்லது வேறு ஏதேனும் திரவத்தில் ஊற வைக்க வேண்டும். ஆனால் நீங்கள் போதுமான திரவம் குடிக்கவில்லை என்றால், ஆளிவிதை வயிற்றில் அடைப்பை (blockage) ஏற்படுத்த கூடும். அதே போல் குறிப்பாக scleroderma நிலையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆளி விதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆளி விதைகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
advertisement
வயிற்றுப்போக்கு : ஆளிவிதையில் நிறைய நார்ச்சத்து அடங்கி உள்ளது. மிதமான அளவில் எடுத்து கொண்டால் மலசிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும் ஆளி விதைகளை ஒருவர் அதிகமாக உட்கொண்டால் அல்லது தினசரி தொடர்ந்து சாப்பிடுவது வயிற்றுப்போக்கை ஏற்படுத்த கூடும். சிலருக்கு வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட கூடும்.




