advertisement

நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் புளியில் இருக்கு தெரியுமா.!!!

Last Updated:
நமது அன்றாட உணவில் புளியை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய பலன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் இந்த புளி சூப்பர் ஃபுட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் பலன்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
1/7
பார்த்தாலே நாவில் எச்சில் ஊறக்கூடிய உணவுகளில் புளிக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு. பலருக்கு புளியின் மகத்துவம் பற்றி தெரிவதில்லை. புளியானது புளிப்பு சுவையை சேர்ப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது என்று பலர் எண்ணி வருகின்றனர்.

2/7
ஆனால் உண்மையில் உணவுக்கு புளிப்பு சுவை சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் இந்த புளியில் எக்கச்சக்கமான நன்மைகள் அடங்கியுள்ளது. நமது அன்றாட உணவில் புளியை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய பலன்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் இந்த புளி சூப்பர் ஃபுட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் பலன்கள் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

3/7
புளியாங்காயின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் C, ஃபிளவனாய்டுகள், கராட்டின்கள், வைட்டமின் B காம்ப்ளக்ஸ் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த புளியானது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. ஆகவே பல்வேறு விதமான நோய்கள் மற்றும் தொற்றுகளை நம்மிடமிருந்து விலக்கி வைத்து, நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் புளி உதவுகிறது.

4/7
கொலஸ்ட்ராலுக்கு நல்லது: பொட்டாசியத்தின் சிறந்த மூலமான புளி, இதய துடிப்பை கட்டுப்படுத்தி, திரவங்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. புளியில் உள்ள ஃபிளவனாய்டுகள் போன்ற பாலிபீனால்கள் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கவும் செய்கிறது. உடலை ஃபிட்டாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் தங்களது கொலஸ்ட்ரால் அளவுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது போன்ற நபர்களுக்கு புளி ஒரு அற்புதமான உணவாக அமைகிறது.

5/7
ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது: ரத்த அழுத்தம் சீராக இல்லாவிட்டால் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படலாம். நாள்பட்ட ரத்த அழுத்தம் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கலாம். மெக்னீசியம் அளவு அதிகமாக இருப்பதால் புளி ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. மேலும் புளியில் பூஞ்சைக்கு எதிராக செயல்படும் ஆண்டி ஃபங்கல் (antifungal) பண்பும் காணப்படுகிறது.

6/7
செரிமானம்: நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைப்பதை செரிமான அமைப்பு உறுதி செய்கிறது. செரிமான அமைப்பு சீராக இயங்காவிட்டால் நமக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உண்டாகலாம். ஆன்டிசெப்டிக் மற்றும் க்ளீனிங் ஏஜென்ட்டாக செயல்படுவதன் மூலமாக இது செரிமானத்திற்கு பயன்படும் குடல் மற்றும் பிற உறுப்புகளின் சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

7/7
இதய ஆரோக்கியம்: இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருக்க கூடிய நபர்களுக்கு கூட ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை கண்டு நாம் அச்சப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சட்னி முதல் குழம்பு வகைகளில் சேரத்து சமைக்கப்படும் புளி நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெறும் புளிப்பு சுவைக்காக மட்டும் அல்லாமல் இதனை உங்கள் அன்றாட உணவுகளை சேர்ப்பது நமது ஒட்டுமொத்த நலனுக்கும் பங்களிக்கிறது.

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...

• நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

• வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

• பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement