மாம்பழம் சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும் : ஏன் தெரியுமா..?
- Published by:Sivaranjani E
- news18-tamil
Last Updated:
கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது மாம்பழம்தான். இப்போது மாம்பழ வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே மாம்பழம் அதிகமாக வாங்க நேரும் இந்த சமயத்தில் இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோடைக்காலத்தில் வெயில் நம்மை வாட்டி எடுத்தாலும் அந்த சீசனில் வரும் பழங்களும் , உணவு வகைகளும் நம்மை ஆறுதல் படுத்தும். அந்த வகையில் கோடையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவது மாம்பழம்தான். இப்போது மாம்பழ வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே மாம்பழம் அதிகமாக வாங்க நேரும் இந்த சமயத்தில் இந்த குறிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
advertisement
அதாவது மாம்பழத்தை சாப்பிடும் முன் அவற்றை தண்ணீரில் அலசி ஊற வைத்துவிடுங்கள். சில நிமிடங்கள் கழித்து அதை சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றை பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் இரசாயணங்கள் , நோய் காரணிகளை உண்டாக்கும் கிருமிகள் என பலவற்றையும் இந்த முறையில் போக்க முடியும். இதுமட்டுமன்றி அவ்வாறு செய்வதால் இன்னும் பல நன்மைகளையும் பெறக்கூடும். அவை என்னென்ன பார்க்கலாம்.
advertisement
ஃபைடிக் அமிலத்தை தவிர்க்கலாம் : நம் உடலின் ஊட்டச்சத்தை குறைக்கும் ஃபைட்டிக் அமிலம் ஆபத்தானதும் கூட. இது உடலுக்கு மிக முக்கியமான இரும்பு, துத்தநாகம் , கால்சியம் மற்றும் இன்னும் பிற தாதுக்களை குறைக்கிறது. இதனால் உடலில் தாதுப்பற்றாக்குறை உண்டாகும். இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஃபைடிக் அமிலம் மாம்பழத்தில் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒரு சில பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளிலும் இயற்கையாக காணப்படும் மூலக்கூறாக உள்ளது. இந்த ஃபைடிக் அமிலம்தான் உடலின் வெப்பம் அதிகரிக்கச் செய்யும் மற்றுமொரு காரணமாகவும் இருக்கிறது. எனவே தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் இந்த ஃபைடிக் அமிலமானது அகலும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
advertisement
advertisement
advertisement
advertisement








