தினசரி காலை இந்த ஜூஸ் குடிங்க.. சும்மா ஒல்லியா ஃபிட்டா ஆயிடுவீங்க..!
- Published by:Aarthy Victor
- news18-tamil
Last Updated:
சாத்துக்குடி ஒரு சிட்ரஸ் பழமாகும், இது பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த பழம் நம்மை புத்துணர்ச்சியாக வைப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது.
advertisement
சாத்துக்குடி ஒரு சிட்ரஸ் பழமாகும், இது பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த பழம் நம்மை புத்துணர்ச்சியாக வைப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. எனவே தங்களது உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்போர், தங்களது காலை டயட்டில் இந்த பழத்தை சேர்ப்பது பல நன்மைகளை வழங்கும். சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்...
advertisement
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்: வளர்சிதை மாற்றம் எனப்படும் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் இந்த பழம் பயனுள்ளதாக இருக்கும். இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சிறப்பாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வைட்டமின் சி-ஆனது carnitine-ன் உற்பத்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்ட்டுள்ளது. இது கொழுப்பு அமிலங்களை மைட்டோகாண்ட்ரியாவிற்கு கொண்டு செல்ல உதவுகிறது, அவை அங்கு ஆற்றலுக்காக எரிக்கப்படுகின்றன. உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க காலையில் ஒரு கிளாஸ் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது, நாள் முழுவதும் கலோரிகளை உங்கள் உடல் மிக திறமையாக எரிக்க உதவ கூடும்.
advertisement
சிறந்த செரிமானம்: இந்த சிட்ரஸ் பழம் உடல் எடை குறைப்புக்கு உதவும் என்று கூறப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று செரிமானத்தை மேம்படுத்தும் இதன் திறன் ஆகும். இந்த பழத்தின் ஜூஸில் உள்ள சிட்ரிக் ஆசிட்டானது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டுகிறது, இதன் மூலம் நாம் சாப்பிடும் உணவு எளிதாக உடைக்கப்பட்டு, தேவையான ஊட்டச்சத்துக்களை உடல் எடுத்து கொள்ளும் திறனை மேம்படுகிறது. இப்படிப்பட்ட செரிமான நன்மைகளை வழங்குவதால் மலச்சிக்கல், உப்புசம் மற்றும் எடை இழப்பு முயற்சிகளுக்கு தடையாக இருக்க கூடிய பிற இரைப்பை குடல் பிரச்சினைகளை தடுக்க இந்த ஜூஸ் உதவும்.
advertisement
உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது: சாத்துக்குடி ஜூஸ் உண்மையில் ஒரு நேச்சுரல் டையூரிடிக் ஆகும். அதாவது இது உடலில் இருந்து நச்சுகள் மற்றும் அதிகப்படியாக இருக்கும் தண்ணீரை வெளியேற்ற உதவும். சாத்துக்குடியின் இந்த பண்பு உடலில் தேவையின்றி தேங்கும் நீர் மற்றும் உப்புசத்தை குறைப்பதன் மூலம் எடை குறைப்பு முயற்சிக்கு உதவும். தவிர சாத்துக்குடி ஜூஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்கவும் உதவும்.
advertisement
பசியை கட்டுக்குள் வைக்கிறது: காலை நேரத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது நாள் முழுவதும் உங்கள் பசியை கட்டுப்படுத்த உதவும். இதற்கு காரணம் சாத்துக்குடியில் உள்ள பெக்டின் ஃபைபர் ஆகும். இது வயிறு நிறைந்த முழுமை உணர்வை ஊக்குவிக்கும். இதன் மூலம் உணவு நேரங்களுக்கு இடையில் பசிக்காக ஆரோக்கியமற்ற உணவுகள் அல்லது தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிடும் வாய்ப்பை குறைக்கும். மேலும் இந்த ஜூஸில் உள்ள சிட்ரிக் ஆசிட்டானது, ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.
advertisement
உடலை ஹைட்ரேட்டாக வைக்கிறது: எடை குறைக்கும் முயற்சிக்கு உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருப்பது முக்கியமானது, ஏனெனில் டிஹைட்ரேஷன் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும் மற்றும் தேவையின்று உடலில் நீர் தேங்க வழிவகுக்கும். அந்த வகையில் முழுமையாக நீர் பழமான சாத்துக்குடி உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. காலையில் ஒரு கிளாஸ் சாத்துக்குடி ஜூஸுடன் உங்கள் நாளை தொடங்குவதன் மூலம், உங்கள் உடலை நன்கு ஹைட்ரேட்டாக வைத்திருக்கவும், எடை குறைப்பை துரிதப்படுத்தவும் முடியும். இந்த பழத்தில் இருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பெற புதிய, பழுத்த சாத்துக்குடியை கொண்டு ஜூஸ் தயாரிக்க நினைவில் கொள்ளுங்கள். இந்த ஜூஸில் அதிகப்படியான சர்க்கரை அல்லது பிற இனிப்புகளை சேர்த்தால் அது எடை இழப்பு முயற்சியை பாதிக்க கூடும்.





