பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!
- Published by:Aarthy Victor
- news18-tamil
Last Updated:
பிரவுன் ரைஸின் நன்மைகளைப் பார்த்து, பலர் இப்போது அதை தங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். ஹெல்த்லைன் படி, பிரவுன் ரைஸில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன மற்றும் வெள்ளை அரிசியை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
பிரவுன் ரைஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதன் காரணமாக மக்கள் மத்தியில் சமீப காலமாக ஒரு பிரபலமான தேர்வாக மாறியுள்ளது. பிரவுன் ரைஸ் என்பது ஒரு முழு தானிய அரிசி வகையாகும். ஊட்டச்சத்து நிறைந்த பிரவுன் ரைஸ் ஆனது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், எடை குறைப்பை பராமரிக்கவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. என்னதான் பாஸ்ட் புட் உணவை நாம் விரும்பி சாப்பிட்டாலும், நம்மில் பலர் ஒரு வேளையாவது ரைஸ் சாப்பிடுவதை தான் மிகவும் விரும்புகிறோம். இதனாலேயே நம் உணவில் அரிசி ஒரு முக்கிய அங்கமாகும். இது நாடு முழுவதும் மிகவும் விரும்பி உண்ணப்படுகிறது, ஆனால் சில காலமாக பிரவுன் ரைஸ்-இன் போக்கு மக்களிடையே வேகமாக அதிகரித்துள்ளது.
advertisement
பிரவுன் ரைஸின் நன்மைகளைப் பார்த்து, பலர் இப்போது அதை தங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர். ஹெல்த்லைன் படி, பிரவுன் ரைஸில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன மற்றும் வெள்ளை அரிசியை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பிரவுன் ரைஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
advertisement
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்: வெள்ளைசாதம்சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது, ஆனால் பிரவுன் ரைஸ் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். பிரவுன் ரைஸ் ஆனது குறைந்த கிளைசெமிக் இன்டக்ஸை கொண்டுள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கிறது. மேலும் டயட்டில் பிரவுன் ரைஸ் சேர்ப்பது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
advertisement
advertisement
எடை குறைப்புக்கு உதவுகிறது: ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க மற்றும் உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் வைட் ரைஸ்-க்கு பதிலாக பிரவுன் ரைஸ்-ஐ உணவில் சேர்த்து கொள்கின்றனர். பிரவுன் ரைஸில் நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை பராமரிப்புக்கு உதவுகிறது. எனவே இதை உணவை டயட்டில் சேர்த்துக் கொள்ளும் போது நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கிறது. அதே போல இதிலிருக்கும் மாங்கனீஸ் எடையை குறைக்க உதவுகிறது.
advertisement
advertisement
advertisement
advertisement







