advertisement

குமரியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்... பகவதி அம்மன் கோவில் தரிசன நேரம் அதிகரிப்பு...

Last Updated:
கன்னியாகுமரி வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1/5
ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தின் போது ஐயப்ப பக்தர்கள் கடலில் புனித நீராடி துளசி மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் கோவில் தரிசன நேரம் மற்றும் சுற்றுலா படகு சேவையும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
advertisement
2/5
ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்
இந்தியாவின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலை முதலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முக்கடல் சங்கமத்தில் கடலில் புனித நீராடிய ஐயப்ப பக்தர்கள் சூரிய உதயத்தை பார்த்தவாறு சூரிய பகவானை வணங்கி துளசி மாலை அணிந்து கொண்டனர்.
advertisement
3/5
ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்
ஒரு சிலர் அருகில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவிலில் சென்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சென்றும் மாலை அணிந்து தங்கள் விரதத்தை இன்று முதல் துவங்கினர். கன்னியாகுமரியில் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் மகர விளக்கு காலம் வரையிலும் அதாவது ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை, ஐயப்ப பக்தர்களின் சீசன் காணப்படுவதால் வடமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கன்னியாகுமரி வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
advertisement
4/5
ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்
இதன் காரணமாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், பகவதி அம்மன் கோவில், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு குழாய் செல்லும் பகுதி, கடற்கரைச் சாலை என அனைத்து பகுதிகளிலும் போலீசாரின் பாதுகாப்பு பணியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் பகவதி அம்மன் கோவிலில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
advertisement
5/5
ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்
அதே போன்று விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி பாலம், திருவள்ளுவர் சிலையை காண இயக்கப்படும் சுற்றுலா படகு சேவையும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கோவில் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
advertisement
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்... ஈசிஆரில் அரங்கேறும் அதிர்ச்சி...! கூண்டோடு சிக்கிய பெண்கள்...
  • நீலாங்கரையில் மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில்; 9 பெண்கள் மீட்பு

  • வேதா வெல்நெஸ் ஸ்பா உரிமையாளர் ஆனந்த், சித்ரா தலைமறைவாக இருக்க தேடுதல் வேட்டை

  • பொதுமக்கள் புகாருக்கு போலீசார் ரைடு நடத்த, மேலாளர் தமிழரசியை கைது செய்து விசாரணை

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement