சென்னையை பூர்விகமாக கொண்ட தாய்.. துல்லியமான கேள்விகளால் அமெரிக்க செனட் சபையை துளைத்தவர்.. யார் இந்த கமலா ஹாரீஸ்..?
- Published by:Raj Kumar
- news18-tamil
Last Updated:
2016ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமெரிக்க செனட் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வானது அதுவே முதல் முறையாகும்.
உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின், அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், முக்கிய கட்சிகளான, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவருக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் அதிபர் தேர்தலில் களமிறங்கினர்.
advertisement
advertisement
advertisement
1964ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவின் ஓக்லாந்தில் பிறந்தவர் கமலாதேவி ஹாரிஸ். இவரது தந்தை டொனால்ட் ஹாரீஸ் ஜமைக்காவைச் சேர்ந்தவர். தாய் சியாமளா சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர். இதனால் சிறு வயது முதலே சென்னை பெசன்ட் நகரில் உள்ள தாத்தா கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி இவர்கள் வந்து சென்றதுண்டு. கமலா ஹாரிஸுக்கு 7 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர்.
advertisement
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்ற கமலா ஹாரிஸ் பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் 2004 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரலாக பணியாற்றினார். பின்னர் 2011 முதல் 2016ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தில் அட்டார்னி ஜெனரலாகவும் இருந்தார்.
advertisement
இதன் மூலம் கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக செயல்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை கமலா ஹாரீஸ் பெற்றார். 2012 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக மாநாட்டில் இவர் ஆற்றிய உரை இவருக்கான அரசியல் கதவை திறந்தது. 2016ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமெரிக்க செனட் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் தேர்வானது அதுவே முதல் முறை.
advertisement
advertisement
அதிபர் டிரம்ப் மீது புள்ளி விவரங்களோடு இவர் வைத்த குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியிலும் இவருக்கான அலையை ஏற்படுத்தியது. அப்போது அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடனுக்கு கடுமையான நெருக்கடியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கமலா ஹாரிஸ் பொருளாதார சிக்கல்களால் தேர்தலிலிருந்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பின்வாங்கினார்.
advertisement





