advertisement

வெள்ளை ரோஜா கற்றுத்தரும் ரீமேக் பாடம்

Last Updated:
1982 இல் போஸ்ட் மார்டம் என்ற படம் மலையாளத்தில் வெளியானது. டாக்டர் பவித்ரன் கதை, திரைக்கதை எழுத, சசிகுமார் படத்தை இயக்கியிருந்தார்.
1/12
 தமிழ்ப் படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்வதும், மலையாளப் படத்தை தழுவி தமிழில் எடுப்பதும் முக்கால் நூற்றாண்டாக நடந்து வருகிறது. கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் மலையாளப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படும் அளவுக்கு தமிழ்ப் படங்கள் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுவதில்லை.

2/12
 தமிழ்ப் படங்களில் பெருவாரியானவை கேரளாவில் வெளியாவதும் ஒரு காரணம். மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படங்களின் வெற்றி சதவீதத்தைப் பார்த்தால் ஒரு விஷயம் புலப்படும்.

3/12
 மலையாளத்தில் படத்தை இயக்கியவரே தமிழ் ரீமேக்கையும் இயக்கினால் மட்டுமே அப்படம் தமிழில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒன்றிரண்டு விதிவிலக்கு தாண்டி இதுதான் உண்மை.

4/12
 36 வயதினிலே, பாபநாசம் இரண்டும் சமீபத்தில் வெற்றி பெற்ற மலையாள ரீமேக்குகள். 36 வயதினிலே படத்தை இயக்கியவர், அப்படத்தின் மலையாள ஒரிஜினலான ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூ. பாபநாசத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான் அதன் ஒரிஜினலான த்ரிஷ்யம் படத்தை இயக்கியிருந்தார்.

5/12
 உன் சமையல் அறையில், ஆறாது சினம், மாலினி 22 பாளையங்கோட்டை போன்ற மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட சமீபகால படங்கள் எதுவும் ஓடவில்லை.

6/12
 இந்தப் படங்களை இயக்கியவர்கள் மலையாள ஒரிஜினலை இயக்கியவர்கள் அல்ல. இயக்குநர் மாறும் போது ரீமேக்குகள் தோல்வியடைகின்றன. இந்த விபத்து பெரும்பாலும் மலையாளப் படத்தை ரீமேக் செய்யும் போதுதான் நிகழ்கிறது.இயக்குநர் மாறினாலும் மலையாளப்பட ரீமேக்குகள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. 39 வருடங்களுக்கு முன் அப்படியொரு சம்பவம் தமிழில் நடந்தது.

7/12
 1982 இல் போஸ்ட் மார்டம் என்ற படம் மலையாளத்தில் வெளியானது. டாக்டர் பவித்ரன் கதை, திரைக்கதை எழுத, சசிகுமார் படத்தை இயக்கியிருந்தார். இதுவொரு த்ரில்லர் திரைப்படம். பிரேம் நசீர், மம்முட்டி, சுகுமாரன், ஸ்வப்னா, பாலன் கே.நாயர், குதிரவட்டம் பப்பு போன்றவர்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தமிழில் வெள்ளை ரோஜா என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.

8/12
 பிரேம நசீர் நடித்த பாதிரியார், போலீஸ் அதிகாரி என்ற இரட்டை வேடங்களில்  சிவாஜியும், மம்முட்டி நடித்த வேடத்தில் பிரபுவும் நடித்தனர். அம்பிகா, ராதா, சிவச்சந்திரன், பண்டரிபாய், தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா, மனோரமா, ஒருவிரல் கிருஷ்ணராவ் உள்ளிட்டவர்கள் உடன் நடித்தனர்.

9/12
 இளையராஜா இசையமைக்க, ஏ.ஜகந்நாதன் படத்தை இயக்கினார். 39 வருடங்களுக்கு முன், 1983 நவம்பர் 4 இதே நாளில் வெளியான வெள்ளை ரோஜா மலையாளப் படம் அளவுக்கு வெற்றி பெற்று 100 நாள்களை கடந்து ஓடியது.

10/12
 அதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஏ.எல்.நாராயணன் தமிழுக்கேற்ப போஸ்ட் மார்டம் படத்தின் திரைக்கதையை எழுதியது. இரண்டாவது இளையராஜாவின் இசையும், பாடல்களும். மலையாளப் படத்தில் ஒரு பாடல், ஒரு கோரஸ் என இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெற்றன.

11/12
 வெள்ளை ரோஜாவில் ஐந்து பாடல்களை தனது இசையால் இளையராஜா இழைத்திருந்தார். முத்துலிங்கம் எழுதிய சோலைப் பூவில் மாலைத் தென்றல்..., நா.காமராசன் எழுதிய ஓ மானே மானே மானே உன்னைத்தானே.., வாலி எழுதி, மலேசியா வாசுதேவன் பாடிய தேவனின் கோவில்... ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

12/12
 சிவாஜி மீது ரசிகர்களுக்கு இருந்த கிரேஸ் படத்துக்கு நல்ல ஓபனிங்கை பெற்றுத் தந்து வெள்ளை ரோஜாவை வெற்றிப் படமாக்கியது.மலையாளப் படங்களை தமிழ்ப்பட இயக்குநர்கள் ரீமேக் செய்யும் போது அவை பெரும்பாலும் தோல்வியை தழுவுகின்றன.அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும், மலையாளப் படங்களை தமிழ்ப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ளவும் வெள்ளை ரோஜா திரைப்படம் உதவும்.

அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வெள்ளி கிரீடம் திருட்டு... வெளுத்தெடுத்த போலீஸ்... திடுக்கிடும் வாக்குமூலம்...

  • சீலியம்பட்டி அம்மன் கோயிலில் ரூ.25 ஆயிரம் மதிப்பு வெள்ளி கிரீடம் திருட்டு

  • சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்ட வாசு கைது செய்யப்பட்டார்

  • கிரீடம் திருடியவர் செலவுக்குப் பணம் இல்லாததால் திருடியதாக வாக்குமூலம்

தாக்கக் குறும்படங்கள்
advertisement
advertisement