பணி ஓய்வுக்குப் பின்னர் வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு கவலையா...? சிறந்த 5 முதலீட்டுத் திட்டங்கள் இதோ...!
- Published by:amudha
- news18-tamil
Last Updated:
நல்ல திட்டமிடல் மற்றும் சரியான முதலீடு மூலமாக ஓய்வு காலத்திற்குப் பிறகு கூட உங்களால் நிலையான மாத வருமானத்தைப் பெற்று, அந்த வசந்த காலத்தை சௌகரியமாக அனுபவிக்க முடியும். அப்படியான சிறந்த 5 முதலீட்டுத் திட்டங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வேலைக்கு செல்லும் காலத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பணி ஓய்வு பெற்ற பிறகு உங்களுடைய வாழ்க்கையை பொருளாதார ரீதியாக பாதுகாப்பானதாக அமைப்பது மிகவும் அவசியம். நிலையான மற்றும் பாதுகாப்பான ரிட்டன்களை வழங்கும் சரியான முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வதன் மூலமாக உங்களுடைய நீண்ட கால இலக்குகளை உண்மையானதாக மாற்றலாம்.
advertisement
நம்முடைய வருமானம் முற்றிலுமாக நின்று, பொருளாதார சுதந்திரம் முன்பை விட மிகவும் முக்கியமான ஒன்றாக மாறக்கூடிய வாழ்க்கையின் ஒரு கட்டம்தான் பணி ஓய்வு. நல்ல திட்டமிடல் மற்றும் சரியான முதலீடு மூலமாக ஓய்வு காலத்திற்குப் பிறகு கூட உங்களால் நிலையான மாத வருமானத்தைப் பெற்று, அந்த வசந்த காலத்தை சௌகரியமாக அனுபவிக்க முடியும். அப்படியான சிறந்த 5 முதலீட்டுத் திட்டங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
advertisement
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (SCSS): அரசு ஆதரவு பெற்றுவரும் இந்த முதலீட்டுத் திட்டமானது 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட தனிநபர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குறைந்தபட்சமாக 1,000 ரூபாயும், அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு 8.20% நிலையான வட்டி விகிதம் வழங்கப்படும். 5 வருடங்களுக்குப் பிறகு இந்த திட்டமானது மெச்சூரிட்டி ஆனாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இதனை நீங்கள் அடுத்தடுத்த 3 வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் மூலமாக நீங்கள் பெரும் ரிட்டன்களுக்கு வரி செலுத்த தேவையில்லை.
advertisement
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY): லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த திட்டமும் அரசு ஆதரவு பெற்று வரும் ஒரு பென்ஷன் திட்டமாக அமைகிறது. 60 வயது மற்றும் மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்காக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 10 வருட காலத்திற்கு 8% முதல் 8.3% என்ற உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் பேமெண்டை இந்த திட்டம் வழங்குகிறது.
advertisement
போஸ்ட் ஆபீஸ் மந்திலி இன்கம் ஸ்கீம் (POMIS): இந்த தபால் நிலைய திட்டத்தின் மூலமாக முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு வருமானத்தை பெறலாம். இந்த திட்டத்தில் பெரிய அளவிலான ஒரு தொகையை முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் அதற்கு 7.4 சதவீத வட்டியை பெறலாம். 5 வருடங்களுக்குப் பிறகு அக்கவுண்ட் மெச்சூரிட்டி ஆகும்போது, முதல் தொகையை வித்டிரா செய்து கொள்ளலாம் அல்லது மீண்டும் அதனை முதலீடு செய்யலாம். இதில் குறைந்தபட்சம் 1,500 ரூபாயும், அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாயையும் உங்களால் முதலீடு செய்ய முடியும். இதுவே ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக 15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
advertisement
நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (NPS): அரசு ஆதரவு உள்ள இந்த திட்டமானது பணி ஓய்வுக்குப் பிறகு தனிநபர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 18 முதல் 70 வயது வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமக்களும் இந்த திட்டத்தில், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். அந்த பணமானது பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும். நீங்கள் 60 வயது அடைந்த பிறகு பணத்தில் இருந்து 60 சதவீதத்தை வித்டிரா செய்யலாம். ஆண்டு பலனைப் பெறுவதற்கு அக்கவுண்டில் குறைந்தபட்சம் 40 சதவீத பணம் இருக்க வேண்டும். இது சந்தையுடன் தொடர்புடையது என்பதால் இந்தத் திட்டத்தில் எந்த ஒரு நிலையான வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படவில்லை.
advertisement
சீனியர் சிட்டிசன் ஃபிக்சட் டெபாசிட்: பல வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வழக்கமான சிட்டிசன்களுடன் ஒப்பிடும்போது சீனியர் சிட்டிசன்களுக்கு 0.25 சதவீத முதல் 1 சதவீதம் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. குறைந்தபட்சமாக 5,000 ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை ஃபிக்சட் டெபாசிட்டில் உங்களால் முதலீடு செய்ய முடியும். சீனியர் சிட்டிசன் முதலீடு என்பது ETT பிரிவின் கீழ் வருவதால் ஆண்டுக்கு ஃபிக்சட் டெபாசிட் மூலமாக நீங்கள் பெறும் 50,000 ரூபாய் வரையிலான வட்டித் தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை.





