TRENDING:

Project Hail Mary : 10 நாட்களில் ரூ. 2500 கோடி வசூல்.. மிரட்டும் 'ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி' – படத்தின் கதை என்ன?

Last Updated:
தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் படங்களில் இது வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
advertisement
1/8
10 நாட்களில் ரூ. 2500 கோடி வசூல்.. மிரட்டும் 'ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி'
ஆண்டி வியர் எழுதிய புகழ்பெற்ற அறிவியல் கற்பனைக் கதை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 'Project Hail Mary' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி உலகளாவிய வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.
advertisement
2/8
இத்திரைப்படம் வெளியான முதல் 10 நாட்களில் ரூ. 2500 கோடி என்ற பிரம்மாண்ட வசூலை எட்டிப் பிடித்துள்ளது. ஹாலிவுட் நட்சத்திரம் ரியான் கோஸ்லிங் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், அறிவியல் பின்னணி கொண்ட படங்களுக்கு உலகளவில் எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. குறிப்பாக, படத்தின் தத்ரூபமான விண்வெளி காட்சிகள் மற்றும் எமோஷனல் கனெக்ட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
advertisement
3/8
இந்தக் கதை பூமியைப் பாதிக்கும் ஒரு மிகப்பெரிய விபரீதத்தில் இருந்து தொடங்குகிறது. 'அஸ்ட்ரோபேக்' எனும் ஒரு நுண்ணுயிரி சூரியனின் ஆற்றலை உறிஞ்சத் தொடங்குகிறது. இதனால் சூரியனின் வெப்பம் குறைந்து, பூமி விரைவில் ஒரு பனிக்காலத்திற்குள் தள்ளப்பட்டு அழியும் நிலை ஏற்படுகிறது.
advertisement
4/8
ரிலேண்ட் கிரேஸ் என்ற அறிவியல் ஆசிரியர் ஒரு விண்கலத்தில் கண்விழிக்கிறார். அவருக்குத் தான் யார், எங்கே இருக்கிறோம் என்பது முதலில் நினைவில் இருப்பதில்லை. தனது சக பயணிகள் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
advertisement
5/8
மெல்ல மெல்ல அவருக்குத் தனது பழைய நினைவுகள் திரும்புகின்றன. மனித இனத்தைக் காப்பாற்ற 'ஹெய்ல் மேரி' (Hail Mary) என்ற விண்கலத்தில் அவர் ஒரு தற்கொலை முயற்சிப் பயணமாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவருகிறது.
advertisement
6/8
இந்தப் பயணத்தின் போது, மற்றொரு கிரகத்தில் இருந்து வந்த 'ராக்கி' என்ற விசித்திரமான ஏலியனை அவர் சந்திக்கிறார். அந்த ஏலியனின் கிரகமும் இதே சூரியப் பிரச்சினையால் அழியும் நிலையில் இருப்பதை கிரேஸ் உணர்கிறார்.
advertisement
7/8
மொழியும் உருவமும் வேறாக இருந்தாலும், அறிவியலை மொழியாகக் கொண்டு இருவரும் இணைந்து தங்கள் கிரகங்களைக் காப்பாற்றப் போராடுவதே படத்தின் விறுவிறுப்பான கதையாகும்
advertisement
8/8
படத்தில் வரும் எதார்த்தமான விண்வெளி இயற்பியல் விதிகள் மற்றும் ஒரு மனிதனுக்கும் ஏலியனுக்கும் இடையிலான அழகான நட்பு ஆகியவை இந்தப் படத்தை மற்ற விண்வெளிப் படங்களிலிருந்து தனித்துக் காட்டுகின்றன. தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் படங்களில் இது வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் செய்திகள்/புகைப்பட தொகுப்பு/பொழுதுபோக்கு/சினிமா/
Project Hail Mary : 10 நாட்களில் ரூ. 2500 கோடி வசூல்.. மிரட்டும் 'ப்ராஜெக்ட் ஹெய்ல் மேரி' – படத்தின் கதை என்ன?
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
Open in App
Home
Video
Impact Shorts
Web Stories