TRENDING:

தென்மாநில பங்களிப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் இல்லை- அமித்ஷா

Last Updated:

தென் மாநிலங்களில் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் ஒன்றுபட்ட முன்னேற்றம் சாத்தியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

impactshort
இம்பாக்ட் ஷார்ட்ஸ்உள்நுழைக சமீபத்திய செய்திகள்
advertisement
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் இன்று நடைபெற்ற தென் மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையேற்று பேசினார். அப்போது அவர், ‘தென்மாநிலங்களில் நாகரீகம், பண்பாடு, மொழி, கலாச்சாரம் ஆகியவை மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒன்றுபட்டு உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
advertisement

தென் மாநிலங்களின் சீரிய பங்களிப்பு இல்லாமல் நாட்டின் ஒன்றுபட்ட முன்னேற்றம் சாத்தியமில்லை. மோடி அரசு அனைத்து மொழிகளையும் சமமாக கருதுகிறது. இன்று இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருப்பவர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசுகின்றனர். அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு சமமாக கருதுகிறது என்பதை இதன் மூலம் நாம் மகிழ்ச்சியுடன் உணர்கிறோம்.

மத்திய அரசு இதுவரை 111 கோடி கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது இதில் இருந்து இந்தியா மீண்டு வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் கொரோனாவில் இருந்து நாடு இன்று வேகமாக மீண்டெழுந்து முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு உள்ளது.

advertisement

வைர வேலுடன் ராஜ அலங்காரத்தில் கந்தன்... சுவாமிமலையில் கந்தன் தரிசனம்...
அனைத்தையும் காண்க

அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி இயக்கத்தை மேலும் வேகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோன்ற மண்டல குழுக்கள் உண்மையிலேயே அறிவுரை வழங்கும் குழுக்கள் மட்டுமே ஆகும். ஆனால் இது போன்ற குழுக்கள் கூட்டத்தால் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இருந்தது போல் அல்லாமல் கடந்த 7 ஆண்டுகளில் 18 முறை மண்டல குழுக்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு முழு காரணம் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு வழங்கும் முழு ஒத்துழைப்பு ஆகும் என்று தெரிவித்தார்.

advertisement

தமிழ் செய்திகள்/ செய்திகள்/இந்தியா/
தென்மாநில பங்களிப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் இல்லை- அமித்ஷா
Open in App
Home
Video
Impact Shorts
Web Stories