TRENDING:

போர் எதிரொலி... டயர் ரீட்ரேட்டிங் மூலப்பொருள் விலையேற்றம்... தொழில் பாதிக்கும் அபாயம்...

Last Updated:

ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போரின் எதிரொலியாக டயர் ரீட்ரேட்டிங் மூலப்பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

impactshort
இம்பாக்ட் ஷார்ட்ஸ்உள்நுழைக சமீபத்திய செய்திகள்
advertisement
டயர் ரீட்ரேட்டிங் (tyre retreading) தொழில் என்பது தேய்ந்து போன பழைய டயர்களின் மேல் பகுதியில் புதிய ரப்பரைப் பதித்து, அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு மாற்றும் ஒரு லாபகரமான தொழிலாகும். குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு, சென்னை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட டயர் ரீட்ரேட்டிங் சிறு, குறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
advertisement

புதிய டயர் மாற்றும் செலவை கணிசமாக  குறைப்பதால், லாரி, பஸ் போன்ற வணிக வாகன உரிமையாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொழில் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானம் தரக்கூடியது.

இந்த நிலையில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக டயர் ரீட்ரேட்டிங் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களான ரப்பர் பெல்ட், சொல்யூஷன், பாண்டிங் கம் என ஒவ்வொரு நாளும் விலை உயர்வதால் இந்த தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

advertisement

இதையும் படிங்க: தங்கக் கடன்களுக்கு நாளை முதல் புதிய விதிகள்... RBI கொடுத்த முக்கிய அறிவிப்புகள்...

ரீட்ரேட்டிங்கிற்கு தேவையான மூலப்பொருட்கள் விலை, மின்சார கட்டணம், கூலி, இதனை சரிக்கட்ட ஒரு டயர் ரீட்ரேட்டிங் செய்ய ரூ.5,500 இருந்த நிலையில் ரூ.1500 ஐ கூடுதலாக உயர்த்தி உள்ளதால் லாரி, பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டயர் ரீட்ரேட்டிங் சிறு, குறு நிறுவனத்தின் உரிமையாளர் ரவி கூறுகையில், "மறைமுகமாகவும், நேரடியாகவும் பல ஆயிரம் பேர் இந்த ரீட்ரேட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரீட்ரேட்டிங் தொழில் என்பது மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில் தொழிலை செய்து வருகின்றோம்.

advertisement

தற்போது வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போரின் காரணமாக மூலப்பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து விட்டதால் எந்த மாதிரியான விலையை நிர்ணயம் செய்யலாம் என தெரியாமல் தவித்து வருகின்றோம். மேலும் ரப்பர் விலையும் மீண்டும் உயரும். இதனால் லாரி உரிமையாளர்கள் ரீட்ரேட்டிங்கிற்கு வருவார்களா என அச்சமாக உள்ளது.

இதையும் படிங்க: School Leave: பள்ளிகளுக்கு 3 நாள் தொடர் விடுமுறை... மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...

advertisement

மத்திய அரசு ரீட்ரேட்டிங் தொழிலுக்கு உண்டான மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு நலிவடைந்து வரும் ரீட்ரேட்டிங் தொழிலுக்கு விசைத்தறிக்கு மானியத்தில் மின்சாரம் வழங்குவது போல் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

வைர வேலுடன் ராஜ அலங்காரத்தில் கந்தன்... சுவாமிமலையில் கந்தன் தரிசனம்...
அனைத்தையும் காண்க

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.
தமிழ் செய்திகள்/நாமக்கல்/
போர் எதிரொலி... டயர் ரீட்ரேட்டிங் மூலப்பொருள் விலையேற்றம்... தொழில் பாதிக்கும் அபாயம்...
Open in App
Home
Video
Impact Shorts
Web Stories