TRENDING:

5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா..?

Last Updated:

5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர்களின் விலை 50 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.

advertisement
5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர்களின் விலை 50 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு
advertisement

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்த நிலையில் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரீமியம் பெட்ரோல் விலையும், வணிக சிலிண்டர் விலையும் ஏற்கனவே உயர்த்தப்பட்டன. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

advertisement

அடிக்கடி ஊர் மாறுவோர், தனியாக வசிப்பவர்கள் உள்ளிட்டோர் முகவரிச் சான்று உட்பட எவ்வித ஆவணமும் இன்றி, உடனுக்குடன் வாங்கக் கூடிய இந்த மினி சிலிண்டர்களின் விலை நாடு முழுவதும் 51 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் விலை உயர்வுக்கு முன்பு வரை 323 ரூபாய்க்கு மினி சிலிண்டர் விற்கப்பட்டது. இதேபோல், விமானங்களுக்கான எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ”தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பிரதேசம் என மாற்றுவதற்கு கூட தயங்க மாட்டார்கள்” முதல்வர் ஸ்டாலின்

advertisement

வைர வேலுடன் ராஜ அலங்காரத்தில் கந்தன்... சுவாமிமலையில் கந்தன் தரிசனம்...
அனைத்தையும் காண்க

உள்நாட்டில் இயக்கப்படும் சார்ட்டர்டு பிளைட் மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத விமானங்களுக்கு எரிபொருள் விலை 107 சதவீதமும், வெளிநாட்டு விமானங்களுக்கு 115 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை பரிவர்த்தனை, அமெரிக்க டாலரில் நடைபெறும் நிலையிலும், ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்துள்ளதாலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான எரிபொருள் விலை முதல்முறையாக ஒரு கிலோ லிட்டர் 2 லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click here to add News18 as your preferred news source on Google.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், மத்திய பட்ஜெட் 2026, தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
தமிழ் செய்திகள்/வணிகம்/
5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா..?
Open in App
Home
Video
Impact Shorts
Web Stories