இந்தியாவின் பழைய
தேசிய கொடிகளை பார்த்துள்ளீர்களா?

1906 முதல் 1947 வரை பல்வேறு சமயங்களில் மாற்றம் கொண்ட இந்தியாவின் தேசியக்கொடிகளை பார்த்துளீர்களா?

இந்தியாவின் முதல் தேசியக் கொடி ஆகஸ்ட் 7, 1906 அன்று கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் (கிரீன் பார்க்) ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொடி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று கிடைமட்ட
பட்டைகளால் ஆனது

பெர்லின் கமிட்டி கொடி, 1907: இந்தியாவின் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற கொடி 1907 இல் மேடம் காமா மற்றும் அவரது நாடுகடத்தப்பட்ட புரட்சியாளர்களின் குழுவால் பாரிஸில் ஏற்றப்பட்டது

1917ல்  அரசியல் போராட்டம் ஒரு முக்கியத் திருப்பத்தை எடுத்தபோது மூன்றாவது கொடி ஏற்றப்பட்டது.இந்தக் கொடியில் ஐந்து சிவப்பு மற்றும் நான்கு பச்சை கிடைமட்டக் கீற்றுகளில்  ஏழு நட்சத்திரங்கள் ,ஒரு மூலையில் வெள்ளை நிற பிறை மற்றும் நட்சத்திரமும் இருந்தது

இந்தக் கொடி இந்திய தேசிய ராணுவத்தின் போர்க் கொடியாக இருந்தது. 1931 ஆம் ஆண்டு கொடி வரலாற்றில் ஒரு அடையாளமாக இருந்தது. மூவர்ணக் கொடியை
 தேசியக் கொடியாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

ஜூலை 22, 1947 அன்று, அரசியலமைப்புச் சபை அதை சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியாக ஏற்றுக்கொண்டது. காவி தியாகத்தையும், வெள்ளை அமைதியையும், பச்சை நில வளத்தையும் குறிக்கும்.கொடியில் உள்ள சின்னமாக சுழலும் சக்கரத்திற்கு பதிலாக அசோக சக்கரவர்த்தியின் தர்ம சர்க்கம்  ஏற்றுக்கொள்ளப்பட்டது

இன்னும் ஸ்டோரீஸ் பார்க்க..