முகேஷ் அம்பானி
இளைய மருமகளாகும்
ராதிகா மெர்ச்சன்ட்..
யார் தெரியுமா.?

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ராதிகா மெர்ச்சன்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளர் விரன் மெர்ச்சன்ட் மற்றும் சைலா மெர்ச்சண்ட் தம்பதிகளின் மகள் ஆவார்.

ராதிகா மெர்ச்சன்ட் மும்பையில் உள்ள புகழ்பெற்ற கதீட்ரல், ஜான் கானான் பள்ளி மற்றும் எகோல் மொண்டியல் வேர்ல்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.

ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ராதிகா ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமான Isprava Groupல் 2017ல் சேர்ந்தார்.

ராதிகா தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார்.

பரத நாட்டியத்தின்மீது தீராத ஆர்வம் கொண்ட ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பயிற்சி எடுத்தார்.

நடன பயிற்சி முடிந்தவுடன் ராதிகாவின் அரங்கேற்றம் கடந்த ஜூன் மாதம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.

ராதிகாவின் அரங்கேற்றமானது மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடைப்பெற்றது.

ராதிகாவின் பெற்றோர், முகேஷ் அம்பானி அவரது  அவரது மனைவி நீடாவும் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

இந்த அரங்கேற்றத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் அவருக்கு ஆர்வம் உண்டு.

சமீபத்தில் முகேஷ் அம்பானி உடனான ராதிகா மெர்சண்ட்-ன் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார்.

வெப் ஸ்டோரீஸ் 

பார்க்க...

இன்னும்

News18Tamil.com